டார்லிங், உனக்கு ஒரு 'பர்த்டே கிஃப்ட்' வாங்கிருக்கேன்...! 'என்ன'னு கண்டுபிடி...! 'அந்த பரிச' பார்த்தப்போ 'ஷாக்' ஆனது... இன்னும் 'அத' விட்டு வெளிய வர முடியல...!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர் தன் மனைவிக்கு அளித்த பரிசு அனைவரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.
![டார்லிங், உனக்கு ஒரு 'பர்த்டே கிஃப்ட்' வாங்கிருக்கேன்...! 'என்ன'னு கண்டுபிடி...! 'அந்த பரிச' பார்த்தப்போ 'ஷாக்' ஆனது... இன்னும் 'அத' விட்டு வெளிய வர முடியல...! டார்லிங், உனக்கு ஒரு 'பர்த்டே கிஃப்ட்' வாங்கிருக்கேன்...! 'என்ன'னு கண்டுபிடி...! 'அந்த பரிச' பார்த்தப்போ 'ஷாக்' ஆனது... இன்னும் 'அத' விட்டு வெளிய வர முடியல...!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/lifestyle/indian-husband-living-in-dubai-presents-rolls-royce-to-wife-thum.jpg)
துபாயில் பிசிசி காண்ட்ராக்டிங் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இந்தியரான பவர் அம்ஜத் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அவர் வழங்கிய விலையுயர்ந்த பரிசு என்னவென்றால் ரோல்ஸ் ராய்ஸ் வ்ரெயித் பிளாக் பேட்ஜ் கார் (Roll Royce Wraith Black Badge).
அம்ஜத் அவர்களின் மனைவி மர்ஜனா தனது கணவரின் அலுவலகத்தில், சிஓஓ-வாக (COO - Chief Operating Officer) பணியாற்றி வருகிறார். கடந்த அக்டோபர் 2-ம் தேதி மர்ஜனாவிற்கு பிறந்தநாளின் போது தன் கணவர் அளித்த பரிசைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த ரோல்ஸ் ராய்ஸ் வ்ரெயித் பிளாக் பேட்ஜ் கார் பளபளப்பான சிகப்பு நிறத்திலும், இதன் வெளிப்புறத்தில் கருப்பு நிற ஹைலைட்களுடனும் அசத்ததலாக உள்ளது. அம்ஜத் வாங்கிய கார் தான் ரோல்ஸ் ராய்ஸ் வ்ரெயித் பிளாக் பேட்ஜ் கார் மிகவும் விலை உயர்ந்த மாடல் எனக் கூறப்படுகிறது.
இந்திய மதிப்பில் இந்த காரின் மதிப்பு சுமார் 8.5 கோடி ரூபாய் ஆகும். அதோடு, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படுவது போல பல்வேறு 'கஸ்டமைசேஷன்' தேர்வுகளையும் வழங்கி வருகிறது.
மேலும், அம்ஜத் தனது மனைவிக்கு பரிசாக வழங்கிய காரின் நீளம் 5,457 மிமீ, அகலம் 1,948 மிமீ, உயரம் 1,550 மிமீ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, இதற்கு முன்னதாகவே மெர்சிடிஸ் பென்ஸ் எஃப்-வேகன், ரேஞ்ச் ரோவர், பென்ட்லீ, டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மற்றும் ஜீப் உள்பட பல்வேறு விலை உயர்ந்த கார்கள் அம்ஜத்திடம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்