'Work From Home' பண்ணும்போது இத கவனமா கடைபிடிங்க.. ஏன்னா இது ரொம்ப முக்கியம் பாஸ்..!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

'Work From Home' பண்ணும்போது இத கவனமா கடைபிடிங்க.. ஏன்னா இது ரொம்ப முக்கியம் பாஸ்..!

வீட்டில் இருந்தே வேலை செய்வது என்பது சற்று ஓய்வான வேலைதான். ஆனால் வீட்டில் இருந்து வேலை என்ற பெயரில், வீட்டிலிருப்பவர்களிடம் வேலை வாங்குவது, நொறுக்குத் தீணிகளை தின்றுகொண்டே வேலை பார்ப்பது போன்ற செயல்களால் நம் உடல்தான் பாதிக்கப்படுகிறது. நமது உடல் எடையிலும் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

தூக்கம்: வீட்டில்தானே வேலை என கண்ட நேரத்தில் தூங்கி எழுவது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இரவு முழுவதும் கண் விழித்து வேலை பார்த்து, காலை நீண்ட நேரம் தூக்குதல் கூடாது. இரவு தூக்கம் என்பது மிக மிக அவசியம். அதனால் வேலை நேரத்தையும், தூக்கத்தையும் சரியாக வகுத்து அதை பின்பற்ற வேண்டும்.

உணவு: வேலை செய்யும்போது நொறுக்குத் தீணிகளை உண்பதை தவிர்க்க வேண்டும். தற்போது கொரோனா வைரஸ் பரவுவதால் ஆரோக்கியமான உணவுகள், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ணுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

உடற்பயிற்சி: ஜிம் மூடியுள்ளது என்பதற்காக உடற்பயிற்சி செய்யாமல் இருந்துவிடாதீர்கள். வீட்டிலேயே சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்யுங்கள். அதற்காக அவசியம் நேரத்தை ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் உடல் சோம்பலாகிவிடும். இதுவரை நீங்கள் உடற்பயிற்சி செய்யவில்லை என்றாலும், இப்போது முயற்சிப்பது நல்லது. உடற்பயிற்சி செய்வதால் உங்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

திட்டமிடுதல்: காலை எழுவது முதல் இரவு தூங்கும் வரை என்னென்ன செய்ய வேண்டும் என திட்டமிட வேண்டும். வீட்டில் இருந்தாலும் கட்டுக்கோப்பாக இருப்பது நம் கையில்தான் உள்ளது.

WORKINGFROMHOME, CORONAVIRUSOUTBREAKINDIA, CORONAVIRUSUPDATE