வாங்க, கொஞ்சம் நேரம் 'அழுதிட்டு' சந்தோஷமா போங்க...! 'அழுறதுக்கு வரிசை கட்டி நிற்கும் மக்கள்...' - நல்ல வரவேற்பை பெற்றுள்ள 'அழுகை' அறை...!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்ஸ்பெயினில் மக்களின் மன இறுக்கத்தை போக்க 'அழுகை அறை' என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மனிதர்களில் சிலர் தங்களுடைய துக்கம், சந்தோசம், அழுகை, கோபம் என அனைத்து உணர்வுகளையும் வெளிக்காட்டுபவர்களாக இருப்பார்கள். ஆனால் ஒரு சிலரோ தங்களுக்கு மகிழ்ச்சி வந்தால் மட்டும் அனைவரிடமும் பகிர்ந்துக் கொண்டு சோகத்தை பகிர்ந்துக் கொள்ள தயங்குவார்கள்.
ஒரு சிலரோ எதையுமே யாரிடமும் வெளிக்காட்டிகொள்ளாமல் அமைதியாக தங்களுக்கென தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இதில் ஒரு சிலர் தங்களுக்கு நினைத்தவற்றை பேச முடியாமல் மனதிலேயே வைத்து கொண்டு இருப்பார்கள்.
இதுபோன்ற மனிதர்களுக்கு நாளாடைவில் மன அழுத்தமும், மன இறுக்கமும் ஏற்பட்டு, அதனால் பல தவறான எண்ணங்களும் தோன்ற வாய்ப்புள்ளது. இந்நிலையில் இம்மதிரியாக இருக்கும் மக்களுக்கு ஸ்பெயின் நாட்டில் 'அழுகை அறை' ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேட்ரிட் நகரில் இருக்கும் இந்த அழுகை அறைக்கு மன அழுத்தம் இருக்கும் மக்களும் அல்லது தாங்கள் யாரிடமாவது மனதில் இருப்பதை தெரிவிக்க வேண்டும் என்று விரும்பும் மக்கள் என யார் வேண்டுமானாலும் வந்து பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தட்டுள்ளது.
இங்கு வருகைதரும் மக்கள், தாங்கள் யாரிடம் மனம்விட்டு அழவேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களை அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசலாம் அல்லது உளவியல் நிபுணர்களிடம் தங்கள் மனதில் உள்ளவற்றை கொட்டி தீர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அழுகை அறை அறிமுகப் படுத்தப்பட்டதற்கான காரணத்தை மருத்துவர்கள் கூறும் போது, 'இன்றைய காலகட்டத்தில் மக்கள் மனம் விட்டுப்பேச ஆள் இல்லாமல் உள்ளனர். அவ்வாறு இருப்பவர்கள் மனதளவில் ஏக்கம் கொண்டு அந்த ஏக்கம் அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கும் அளவிற்கு செல்கிறது. அதற்காகவே இந்த அழுகை அறை உளவியல் நிபுணர்களுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டது.' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்பெயினில் 10-ல் ஒருவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாகவும், மக்களின் மன நலனை பாதுகாக்கவே ஸ்பெயின் அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்