‘மாப்பிள்ளை அழைப்பில்’... ‘கிராண்ட் என்ட்ரி கொடுக்க’... ‘மணமகன் எடுத்த ரிஸ்க்’... வைரலான வீடியோ!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்ஒவ்வொருவருமே தங்களது திருமணத்தை சிறப்பான, மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற விரும்புவர். அப்படி இங்கே ஒரு மணமகன் தனது திருமண விழாவிற்கு, கிராண்ட் என்ட்ரி கொடுக்க விரும்பியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆகாஷ் யாதவ் என்ற இளைஞரே இந்த ரிஸ்க்கை எடுத்துள்ளார். இவர் கங்கன்பிரீத் சிங் என்ற இளம்பெண்ணை மணக்க இருந்தார். இந்தியர்களான இவர்களின் திருமணம், மெக்சிகோவில் கடற்கரை நகரமான லாஸ் கேபோஸில், ஹார்ட் ராக் ஓட்டலில் நடைபெற இருந்தது. இதற்காக உறவினர்கள், நண்பர்கள் என 500 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
கிராண்ட் என்ட்ரி கொடுக்க விரும்பிய மாப்பிள்ளை, பாராசூட் மூலம் மிதந்தபடியே நட்சத்திர ஓட்டலில் வந்து இறங்கினார். இத்தனைக்கும் அங்கு புயல் வரப்போவதால், ஓட்டல் நிர்வாகம் முதல் உறவினர்கள் வரை இப்படி செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளனர். இதனை பொருட்படுத்தாமல், முதலில் கடல் வழியாக, உறவினர்களுடன் படகு மூலம் என்ட்ரி கொடுக்க விரும்பிய மணமகன் ஆகாஷ், தனது திட்டத்தை மாற்றினார்.
பின்னர் மதியம் 12.30 மணியளவில் இறங்குவதற்கு பதில், புயல் வரப்போவதாக எச்சரிக்கை விடுத்ததால், அதற்கு முன்னாலேயே பாராசூட்டில் வந்திறங்கினார். சாகசத்துடன் விரும்பியபடி மணமுடித்த ஆகாஷ் யாதவ் - கங்கன்பிரீத் சிங் தம்பதி இருவரும், இந்தியர்கள் என்றாலும், அமெரிக்காவில் நடிகர்களாகவும், நடனக்கலைஞர்களாகவும் உள்ளனர். அதனால் இந்திய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.