1 கிலோ 1000 ரூபா... அப்படி என்ன ஸ்பெஷல் இந்த 'கறி'யில?... மருத்துவர்கள் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

கடந்த ஜனவரி மாதம் கிலோ 450 ரூபாய்க்கு விற்பனையான கோழிக்கறி, தற்போது கிலோ 1000 ரூபாய் என விற்பனையாகி வருகிறது.

1 கிலோ 1000 ரூபா... அப்படி என்ன ஸ்பெஷல் இந்த 'கறி'யில?... மருத்துவர்கள் விளக்கம்!

கொரோனா வந்தாலும் வந்தது மக்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவுகள் குறித்த தேடல் அதிகமாகி விட்டது. தாங்களே இணையத்தில் தேடியும், மருத்துவர்களின் அறிவுரைப்படியும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கடக்நாத் கோழிகளுக்கு தற்போது மக்கள் மத்தியில் மிகுந்த மவுசு ஏற்பட்டுள்ளது.

கோழிக்கறி, முட்டை என அனைத்தும் கருப்பு கலரிலேயே இருப்பது தான் இதன் ஸ்பெஷல். இந்த கோழியை சொந்தம் கொண்டாடி சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் என 2 மாநிலங்களும் கட்டிப்பிடித்து உருண்டு பெரிய பஞ்சாயத்தாகி கடைசியில் கோழி மத்திய பிரதேச மாநிலத்துக்கே சொந்தம் என தீர்ப்பு கிடைத்தது. இதையடுத்து இந்த கோழிகளை மத்திய பிரதேச மாநிலம் இந்தியாவின் மூலை, முடுக்குகளில் எல்லாம் கொண்டு சேர்க்க ஆரம்பித்து உள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் கடக்நாத் கோழிகளை இறைச்சி, முட்டைகளுக்காக வளர்க்க ஆரம்பித்து இருக்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்கள், இந்த கருங்கோழியில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாக உள்ளது. இதை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் கட்டுப்படும். இதய நோய்கள் கட்டுக்குள் இருக்கும். ஆஸ்துமா, கல்லீரல் பிரச்சினைகளுக்கும் ஏற்றது. இதன் முட்டைகள் சிறுநீரக, தலைவலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு சிறந்தது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளுக்கும் இந்த கருங்கோழிக்கறி சிறந்தது என தெரிவித்து இருக்கின்றனர். இப்படி ஏராளமான நன்மைகள் இருப்பதால் தற்போது 1 கிலோ கறி 1000 ரூபாய்க்கும் 1 முட்டை 20 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

மற்ற செய்திகள்