“இந்த நேரத்துல, காலிப் பணிகளை நிரப்ப, இவங்கள விட சரியான ஊழியர்கள் இல்ல!”.. ஐடி நிறுவனங்கள் எடுத்த ‘பரபரப்பு’ முடிவு!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

இந்த மாத தொடக்கத்தில், புனேவை தலைமையிடமாகக் கொண்ட பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் என்எஸ்இ வெளியிட்ட அறிக்கையின்படி, தமது முன்னாள் ஊழியர்கள் மீண்டும் நிறுவனத்தில் சேர விரும்பினால் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுபற்றிய அந்த அறிக்கையில், “தொடர்ச்சியான பணியமர்த்தல் மூலம் முன்னாள் ஊழியர்களாக இருக்கும் உங்களை இந்நாள் ஊழியர்களாக மாற்ற விரும்புவதால், உங்களுக்காக 600க்கும் மேற்பட்ட பணியிடங்களையும் பதவிகளையும் உருவாக்கியிருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த நேரத்துல, காலிப் பணிகளை நிரப்ப, இவங்கள விட சரியான ஊழியர்கள் இல்ல!”.. ஐடி நிறுவனங்கள் எடுத்த ‘பரபரப்பு’ முடிவு!

வாடிக்கையாளர்கள் செலவினங்களைக் குறைப்பதற்கும் அவர்களின் தொழில்நுட்பங்களை அளவிடுவதற்கும் அவுட்சோர்சிங் எனும் நிர்வாக முறை முடுக்கப்பட்டுள்ளதால் வணிக நிறுவனங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதால், மைண்ட்ட்ரீ , பிர்லாசாஃப்ட் மற்றும் எல்டிஐ உள்ளிட்ட ஐடி சேவை நிறுவனங்கள் தங்கள் பழைய ஊழியர்களின் நெட்வொர்க்கை தூசி தட்டுவதாக தெரிகிறது.

இந்த முன்னாள் ஊழியர்களின் நெட்வொர்க், தங்கள் நிறுவனம் விரும்புவதை சரியாக அறிந்த தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த ஆதாரமாக இருப்பதுடன், நடப்பு சூழலில் நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் மென்பொருள் நிறுவனங்கள் ஆள்சேர்ப்பின் போது தங்கள் நிறுவனத்தின் தனித்துவத்தை முன்னிலைப்படுத்தவும், புதிய பணியாளர்கள் கொரோனா சூழலால் ரிமோட் வொர்க் செய்வதாலும், முன்னாள் ஊழியர்களை திரும்ப அழைக்கும் முடிவை இந்நிறுவனங்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

"முன்னாள் ஊழியர்களின் விஷயத்தை பொருத்தவரை, வீட்டில் இருந்து பணிபுரிந்தாலும் கூட உற்பத்தித்திறனுக்கான வேகத்தை நிறுவனம் மிக எளிதாக அடைய முடியும் என்பதில் சந்தேகம் இல்லை, ஏனெனில் அவர்கள் நிறுவனத்தின் கலாச்சாரம் மற்றும் செயல்முறைகள் பற்றி ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள்," என்று பிர்லாசாஃப்டின் தலைமை அதிகாரி அருண் ராவ் கூறியுள்ளார்.

“முந்தைய ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தும் போது, நிறுவனத்தின் செயல்பாடுகளை மிக விரைவாக ஒருங்கிணைக்க முடியும்” என்று எல்.டி.ஐயின் தலைமை மனித வள அலுவலர் அஜய் திரிபாதி கூறியுள்ளார்.இதேபோல் முன்னாள் மகளிர் ஊழியர்களையும், ஓய்வுபெற்ற பின்னர் வேலைக்குத் திரும்பும் பிற பெண்களையும் திரும்பக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ‘ரிவைவ் வித் எல்டிஐ’ என்ற திட்டத்தை இந்நிறுவனம் நடத்துவது குறிப்பிடத்தக்கது. “இந்த முடிவால், தொழில்துறை முழுவதிலும் உள்ள பெண் தொழில் வல்லுநர்களிடமிருந்து, எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது” என்றும் திரிபாதி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்