Kadaisi Vivasayi Others

நீங்க தாம்பத்தியத்தில் active- ஆ?.. தப்பா புரிஞ்சுகாதீங்க.. டாக்டர் தந்த முக்கிய அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

டெக்னாலஜியில் சமகால சமூகம் பல்வேறு உச்சங்களை தொட்டிருந்தாலும் திருமண, தாம்பத்திய விஷயங்களில் மனிதகுலம் தொடர்ந்து பல தவறான கருத்தாக்கங்களையே பின்பற்றிவருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடலுறவு குறித்த புரிதல் பல படித்த தம்பதிகளிடமே இருப்பதில்லை என மருத்துவர்கள் கவலை தெரிவிப்பதையும் நாம் அவ்வப்போது பார்க்க முடிகிறது. இதில், பல உளவியல் சிக்கல்களும் நிறைந்திருக்கிறது என்பதே டாக்டர்களின் வாதம்.

நீங்க தாம்பத்தியத்தில் active- ஆ?.. தப்பா புரிஞ்சுகாதீங்க.. டாக்டர் தந்த முக்கிய அட்வைஸ்..!

மருத்துவர்களிடம் உண்மையை மறைக்க கூடாது, அதுவே நம்முடைய உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் வலு சேர்க்கும். ஆனால், இன்றைய நவீன உலகிலும் தாம்பத்தியம் குறித்து பேசவே மக்கள் தயங்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜட்ஜ் பண்ணாதீங்க..

இதுபற்றி பேசிய மருத்துவர் கார்த்திகா இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பே உறவில் ஈடுபவது சகஜமாகிவிட்டது. அப்படியானோரை யாரும் விமர்சிக்க தேவையில்லை. இது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம். அதே வேளையில், உடலுறவு குறித்து மருத்துவர்கள் கேட்கும் வேளையில்  அதற்காக கவலைப்படவும் தேவையில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Are you Sexually Active? Here doctors Best advice

மேலும் அவர் பேசுகையில்," நீங்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் போது உங்களிடம் மருத்துவர்,"நீங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் இருக்கிறீர்களா?" எனக் கேட்பது தவறான விஷயம் கிடையாது. இன்றைய நவீன உலகில் அப்படியான வாழ்க்கை முறையை பலரும் பின்பற்றி வருகிறார்கள். அதனாலேயே அவர்களை விமர்சிக்கத் தேவையில்லை. இது அவர்களது தனிப்பட்ட சுதந்திரம். அதே நேரத்தில் இதுபற்றி டாக்டர்கள் கேள்வி எழுப்பும் போது  தயங்காமல் பதிலளிப்பதால் மட்டுமே மருத்துவர்களால் உங்களுடைய சிரமங்களை புரிந்துகொள்ள முடியும்" எனக் குறிப்பிட்டார்.

போன் வழி ஆலோசனை

மேலும், போன் மூலமாக மருத்துவ உதவிகள் பெறுவது குறித்துப் பேசிய டாக்டர் கார்த்திகா," மொபைல் மூலமாக மருத்துவ ஆலோசனை பெறுவது அனைவருக்கும் உகந்ததாக இருக்கும் எனச் சொல்ல முடியாது" எனத் தெரிவித்தார்.

Are you Sexually Active? Here doctors Best advice

இதுபற்றி பேசுகையில்," எந்த ஒரு நோய்க்கும் போன் மூலமாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்கும் முறை சிலருக்கு மட்டுமே கைகொடுக்கும். உங்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் இருக்கையில் குறிப்பாக இன்றைய கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்களால் உங்களுக்கு போன் மூலமாக மட்டுமே முழுவதுமாக உதவ முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்" என்றார்.

 

தாம்பத்யம், திருமணம், ஆலோசனை, MARRIAGE, RELATIONSHIP

மற்ற செய்திகள்