'குழந்தைகள் ஏன் கொரோனா பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்?'... 'குட்டீஸ்களுக்கு கொரோனாவை புரியவைப்பது எப்படி?'... இந்த வீடியோவ அவசியம் காட்டுங்க!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள சமூக விலகலை கடைபிடிக்குமாறு உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதனை கார்ட்டூன் வடிவத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு காணொளி சித்தரிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5 லட்சத்து 49 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24 ஆயிரத்து 863 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும், கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் குறித்து குழந்தைகள் மனதில் ஆயிரம் கேள்விகள் எழலாம். வைரஸ் என்றால் என்ன? கண்ணுக்கே தெரியாத ஒன்றால் நம்மைக் கொல்ல முடியுமா? என்றெல்லாம் அவர்கள் சிந்திக்கக்கூடும். பெரிய அளவிலான சமூக வெளிச்சம் இல்லாத முதியவர்களுக்கு கூட இது போன்ற சந்தேகங்கள் வரலாம்.
இதையொட்டி, சமூக விலகலை ஏன் கடைபிடிக்க வேண்டும்? அது எவ்வாறு நம்மை கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் ஒரு கார்ட்டூன் காணொளி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை குழந்தைகளிடம் காண்பிக்கும்போது வைரஸ் எவ்வாறு பரவலாம் என்பதைப் பற்றிய ஒரு புரிதல், அவர்களின் வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும்.