இந்த வீடியோவை பார்த்தால்... '90ஸ் கிட்ஸ்' இன் வலியை புரிஞ்சுக்குவீங்க!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்இந்த 90ஸ் கிட்ஸ்களுக்கு எப்போதான் கல்யாணம் ஆகப்போகிறதோ? என்ற கேள்வி ஓய்வது போலத் தெரியவில்லை. சமீபத்தில் 90ஸ் கிட்ஸ் ஒருவர் '90-ஸ் கிட்ஸ்களின்' வாழ்க்கையே ஒரு லூப் தான் என வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.
90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில் திருமணம் என்பது 'மாநாடு' திரைப்படத்தில் வரும் லூப் போலத்தான் எனப் புலம்பி உள்ளார். அந்த வீடியோவில் 90ஸ் கிட் ஒருவர், "90-ஸ் கிட்ஸ்களுக்கு பொண்ணு பார்ப்பாங்க, ஜாதகம் வாங்குவாங்க, செட் ஆகலை, ரிப்பீட்டு" இதேபோல் மீண்டும், "பொண்ணு பார்ப்பாங்க, ஜாதகம் வாங்குவாங்க, செட் ஆகலை, ரிப்பீட்டு" என 90-ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையே லூப் தான்.
90-ஸ் கிட்ஸ்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே இப்படி லூப்-ல் தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகப் புலம்புகின்றனர். தற்போது வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள், "எழுந்துக்குறோம், லேப்டான் எடுக்குறோம், மூடுறோம், தூங்குறோம், ரிப்பீட்டு". வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள், "சமைக்கிறாங்க, துவைக்கிறாங்க, ரிப்பீட்டு" எனப் பலரது வாழ்க்கையில் தற்போது லூப்-ல் ரிப்பிட் மோட்-ல் தான் போய்க் கொண்டு இருக்கிறது.
மற்ற செய்திகள்