70 வயசுல சிங்கிளா இருந்தேன்.. இப்போ மிங்கிள் ஆயாச்சு.. காதலர் தினத்தில் வைரலாகி உள்ள 73 வயது பாட்டி
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்அமெரிக்கா: காதலர் தினத்தை முன்னிட்டு இணையத்தில் 73 வயதான பாட்டியின் காதல் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீளமான கூந்தலினால் கடுப்பான பயணி.. நெட்டிசன்கள் கொடுத்த பதிலடி தான் ஹைலைட்டே.. வைரலாகும் புகைப்படம்
பொதுவாக நம் ஊரில் `திருமணமாகிவிட்டதே - குழந்தைகள் இருக்கின்றார்களே - குழந்தைகள் வளர்ந்துவிட்டார்களே - வயதான பிறகு என்ன பிரிவு வேண்டியிருக்கு’ என பிரிவை தள்ளிப்போடுவதற்கு தான் காரணங்கள் இருக்கிறதே தவிர, `இந்த உறவால் நான் மனரீதியாக அல்லது உடல்ரீதியாக துன்பத்துக்கு உள்ளாகிறேன். இங்கு எனக்கான காதல் எனக்கு என் இணையரிடமிருந்து கிடைக்கவில்லை’ என துணிந்து சொல்வதற்கான ஒரு வார்த்தை கூட நம் மக்களுக்கு இல்லை.
ஆணோ, பெண்ணோ `காதலால் நாங்கள் இணைந்திருக்கிறோம்’ என்று சொல்வது, இந்திய தம்பதிகளிடையே சற்று குறைவுதான். ஆனால், 73 வயதான அமெரிக்க பாட்டி ஒருவர் இதனை நிகழ்த்தி காட்டியுள்ளார். அமெரிக்காவின் லிபோர்னியாவின் லாஸ் ஏஞ்செல்ஸை சேர்ந்த 73 வயதாகும் செவிலியர் கரோல், கடந்த சில தினங்களாகவே இணையத்தில் பிரபலமாகியுள்ளார். இதற்கு காரணம் அவருடைய காதல். கரோல் தன் வாழ்வின் 73 வருடங்களை கழித்த பிறகு தனக்கான உண்மையான காதலை கண்டிருப்பதாக இந்த காதலர் தினத்தன்று மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் தெரிவித்திருத்திருக்கிறார்.
உண்மையான காதலை கண்டறிந்தேன்:
அவர் பதிவிட்ட டிவீட்டர் பதிவில், 'வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. கிட்டத்தட்ட 40 வருட மணவாழ்க்கைக்குப் பின்னர் என்னுடைய 70-வது வயதில் நான் மீண்டும் சிங்கிளாவேன் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அதேபோல, என்னுடைய 73-வது வயதில், அதுவும் உலகமே கொரோனா போன்றதொரு பெருந்தொற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் இடைபட்ட காலத்தில், எனக்கான ஒரு உண்மையான காதலை நான் கண்டறிவேன் என நான் நினைக்கவேயில்லை. ஆனால் அது நடந்துவிட்டது' என பதிவிட்டுள்ளார்.
மற்றவர்கள் விசயத்தில் தலையிடுவது வேடிக்கை:
அதோடு, 'இது மிகவும் ஆச்சர்யமளிக்கும் நிகழ்வுதான். உங்கள் அனைவரது வாழ்த்துக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். பலரும் என்னுடைய முதுமை, அதனால் எனக்கு உள்ள மனநிலை மாற்றங்கள், பொருளாதார நிலைப்பாடு, பாலியல் சார்ந்த விஷயங்கள் குறித்தெல்லாம் கணித்து பேசுவதை காணமுடிகிறது. என்னை பற்றி பிறர் யூகங்களில் பேசுவது, எனக்கு வேடிக்கையாக இருக்கிறது' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
காதலிப்பது அடிப்படை உரிமை:
'Everyone in this world deserves Love' என்றொரு ஆங்கில சொல்லாடல் உண்டு. எல்லோருக்கும் காதலிக்கவும், காதலிக்கப்படுவதற்கும் எல்லா உரிமையும் இந்த பூமியில் உண்டு. கரோல் மட்டுமல்ல, கரோல் பதிவிட்டுள்ள ட்வீட்டின் பின்னூட்டங்களை காண்கையில், அதில் சில முதியோர்கள் தங்களுக்கும் இப்படி நிகழ்ந்து - தாங்களும் முதுமையில் தங்கள் இணையரை கண்டதாக கூறுவதை காண்கையில், இந்த பூமி காதலால் உருவானதுதான் என்பதை நம்மால் உணரவும் முடிகிறது.
மிடில் கிளாஸ் பெண்கள் தான் டார்கெட்.. இதுவரை 14 பெண்கள்... சிக்கிய 54 வயது மன்மதன்?
மற்ற செய்திகள்