'வேற லெவல்ல பண்றீங்கப்பா'.. 'எப்படித்தான் புதுசா புதுசா யோசிக்கிறீங்களோ!'.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

இரவு உணவு உண்ணுவதற்கான வழக்குமுறை என்பது பல நாடுகளில் கலாச்சாரமாகவே இருந்து வருகிறது. ஆனால் உண்ணும் உணவுக்கான நேரத்தை சரியாகக் கொடுத்தும், அதை அனுபவமாக்கிக் கொண்டாடுவதும்தான் அத்தனை நாட்டு கலாச்சாரங்களிலும் இருக்கும் பொதுத் தன்மை எனலாம்.

'வேற லெவல்ல பண்றீங்கப்பா'.. 'எப்படித்தான் புதுசா புதுசா யோசிக்கிறீங்களோ!'.. வைரல் வீடியோ!

ஆனால் அது வழக்கமாக இருப்பதில் இருந்து ஒரு புதிய முயற்சியாக நொய்டாவில் உருவாகியுள்ள உணவகம் ஒன்று பிரபலமாகி வருகிறது. ஃப்ளை டைனிங் என்று சொல்லப்படும் இந்த பறக்கும் உணவகம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 160 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தரத்தில் தொங்கும் இந்த உணவரங்க மேஜையில் 24 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடவும், அதுபோக வெயிட்டர்கள் நிற்பதற்கும் இடம் உண்டு.

அத்தனை தாங்குதிறனும் இந்த டைனிங் டேபிள் அமைப்புக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. கிரேன் மூலம் மேலே உயர்த்தப்படும் இந்த ஃப்ளை டைனிங்கில் உணவுண்ணுவதற்கு சில விதிகளும் உள்ளன. அதாவது இந்த ஃப்ளை டைனிங்கில் அமர்ந்து அதிகபட்சமாக 40 நிமிடங்கள் மட்டுமே உணவுண்ண வேண்டும்; கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் உணவுண்டால், டைனிங் டேபிள் 4 அடி உயரத்துக்கு மட்டுமே உயர்த்தப்படுமாம்.

ஒரு முறை துபாய் சென்றபோது அங்கு இதுபோன்றதொரு அமைப்பைப் பார்த்த நிகில் குமார் என்பவர் கொடுத்த யோசனையின் கீழ், ஜெர்மனி தொழில்நுட்ப வல்லுநர்களால், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையே நோக்கமாகக் கொண்டு தற்போது  மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படத் தொடங்கியுள்ளது இந்த உணவகம். இந்த ஃப்ளை டைனிங் தற்போது வைரலாகி வருகிறது.

VIDEOVIRAL, FLYDINING, RESTAURANTS, NOIDA