மது அருந்துவதன் மூலம் கொரோனவை தடுக்கலாமா? ... விளக்கம் தரும் உலக சுகாதார அமைப்பு
முகப்பு > செய்திகள் > கதைகள்மது அருந்தினால் கொரோனா சரியாகுமா என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் நாடுகள் அனைத்திலும் பரவ ஆரம்பித்தது முதல் அதுகுறித்த வதந்திகளும் பல்வேறு விதமாக பரவி வருகின்றன. மக்களிடையே உருவாகும் பல்வேறு வதந்திகளுக்கு உலக சுகாதார அமைப்பும் அவ்வப்போது விளக்கங்களை அளித்து வருகிறது. முன்னதாக வெப்பம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாது என்றெல்லாம் பல்வேறு வதந்திகள் பரவின. இவை எதுவும் உண்மையில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
இதையடுத்து புதிதாக மது அருந்தினால் கொரோனா வைரஸ் பாதிக்காது என்ற வதந்தி கிளம்பி வருகின்றன. இதனை நம்பி ஈரானில் மது அருந்திய சிலர் உயிரிழந்தனர். மது அருந்துவதன் மூலம் கொரோனா குணமாகாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து மது தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மது அருந்துவதால் கொரோனா வைரஸை தடுக்க முடியும் என நம்பி அதிகமாக மது அருந்தினால் உடலுக்கு தான் தீங்கு ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.