பூக்களில் ஒரு 'அர்னால்ட் ஸ்வாஸ்நேகர்'...எம்மாம் பெரிய 'சைசு'... தூக்கிச் செல்ல '4 பேர்' வேண்டும் போல...!
முகப்பு > செய்திகள் > கதைகள்மிஸ்டர்வேர்ல்ட், மிஸ்டர் ஒலிம்பியா போன்ற பட்டங்களை பல முறை வென்ற அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் போல, பூக்களில் ஒரு அர்னால்ட் என்றால் அது இந்தோனேஷியாவில் மலர்ந்த இந்த பூவைத் தான் சொல்ல வேண்டும்.
இந்ததேனேஷியாவின் சுமத்ரா தீவில் பூத்துள்ள இந்த பூ சுமார் 4 அடி அகலத்திற்கு பிரம்மாண்டமாக பூத்துள்ளது. அர்னால்டின் அகண்ட தோல்களைப் போல் பிம்மாண்டமாக இருப்பதாலோ, என்னவோ? இந்த பூவுக்கு ரப்லேசியா அர்னால்டி (rafflesia arnoldii) என பெயரிடப்பட்டுள்ளது. உலகில் இதவரை பூத்த மலர்களில் இதுவே மிகப்பெரியது என தாவரவியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒட்டுண்ணி தாவர வகையைச் சேர்ந்த இந்த பூவின் செடிகளுக்கு வேர்கள், இலைகள் என எதுவும் கிடையாது. மற்றொரு தாவரத்தை சார்ந்து வாழும் இந்த செடிகளில் மலர்கள் மலர்ந்து வெளியே வரும் போதுதான் அது மற்றொரு தாவரத்தில் ஒட்டுண்ணியாக இருப்பதே தெரியவரும் என தாவரவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
இந்த பூவிலிருந்து அழுகிய இறைச்சியின் துர்நாற்றம் வீசும் என்பதால் இந்த மலர் பிணமலர் என அழைக்கப்படுகிறது.