'பர்ஸை மிஸ் பண்ணிய நபர்'... 'பணத்தை அக்கவுண்ட்டில் அனுப்பிய முன்பின் தெரியாதவர்'.. நெகிழ்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

பர்ஸை தவறவிட்ட மனிதர் ஒருவருக்கு, நடந்துள்ள அற்புதமான விஷயம் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. 

'பர்ஸை மிஸ் பண்ணிய நபர்'... 'பணத்தை அக்கவுண்ட்டில் அனுப்பிய முன்பின் தெரியாதவர்'.. நெகிழ்ச்சி சம்பவம்!

ட்விட்டரில் இதுபற்றி பகிர்ந்த டிம் கேமரூன், தனது பர்ஸை முன் தினம் இழந்ததாகவும், அதன் பின் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த தருணத்தில்தான், அந்த அதிசயம் நிகழ்ந்தது பற்றி தனக்கு தெரிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அதாவது, தனது பர்ஸ் யாரோ ஒரு முகமறியா மனிதர் ஒருவரின் கைகளில் கிடைத்ததாகவும், அவரோ, அந்த பர்ஸை வைத்து, அதில் இருக்கும் தனது வங்கிக் கணக்கு விபரங்களைப் பார்த்து, பர்ஸில் இருந்த பணத்தொகையை தனக்கு அனுப்பி வைத்ததாகவும், அதற்கான மெசேஜ் தனக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

அந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டபோது வங்கிப் பணவர்த்தனை விபரங்களில், பணத்தை அனுப்பி வைத்த நபர், தொலைந்து போன பர்ஸ் என்று தலைப்பிட்டதோடு, அவரது போன் நம்பரையும் இணைத்து மெசேஜ் அல்லது போன் செய்யுங்கள் என்று எழுதியிருந்ததாகவும் பகிர்ந்துள்ளார். 

 

STRANGER, WALLET, VIRAL, HUMANITY