"குறை எல்லாம் ஒண்ணுமே இல்ல".. பந்து வீசிய மாற்றுத்திறனாளி.. நெட்டிசன்கள் இதயத்தை வென்ற வைரல் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

இன்றைய காலகட்டத்தில், நம்மில் பலரும் சோஷியல் மீடியாவில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறோம்.

"குறை எல்லாம் ஒண்ணுமே இல்ல".. பந்து வீசிய மாற்றுத்திறனாளி.. நெட்டிசன்கள் இதயத்தை வென்ற வைரல் வீடியோ!!

Also Read | தமிழில் பேசிய ஹர்திக் பாண்டியா.. "அட, என்ன சொல்றாரு பாருங்க".. பட்டையை கிளப்பும் வீடியோ!!

இதில், வேடிக்கையான, உணர்வுபூர்வுமானது என வித விதமான வீடியோக்கள் மற்றும் செய்திகள் அதிகம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

இதில், மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான வீடியோவை பார்த்து கடந்து செல்வதுடன் மட்டுமில்லாமல், அதனை அதிகம் பகிர்ந்து மற்றவர் கவனத்தில் விழவும் அனைவரும் முயற்சி செய்வார்கள்.

அந்த வகையில், மாற்றுத் திறனாளி நபர் ஒருவர்,பந்து வீசுவது தொடர்பான வீடியோ, தற்போது பலரது இதயத்தையும் வென்று வருகிறது. நமது நாட்டில் கோடிக்கணக்கான மக்களால் அதிகம் பார்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். சிறு வயதில் இருந்தே பலரும் கிரிக்கெட் போட்டியில் சாதிக்க வேண்டும் என முயற்சி செய்து அதற்கான வழிகளில் சரியாக பயணித்து தங்கள் இலட்சியத்தை அடையவும் செய்வார்கள்.

specially abled man bowling video wins people hearts

இதில், பவுலிங் மற்றும் பேட்டிங் என எதுவாக இருந்தாலும் அதில் சிறந்த வீரராக வர வேண்டும் என்றால், தொடர்ந்து கடின உழைப்பை போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த நிலையில், மாற்றுத் திறனாளி நபர் ஒருவர், கிரிக்கெட் மைதானத்தில் அசத்தலாக பந்து வீசுவது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் குமார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், மாற்றுத் திறனாளி நபர் ஒருவர் மைதானத்தில் மிகவும் அசத்தலாக பந்து வீசுகிறார்.

specially abled man bowling video wins people hearts

தன்னிடம் உள்ள குறையைத் தாண்டி மிகவும் அற்புதமாக செயல்படும் இந்த வீடியோவை பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் குமார், "நிலையான பயிற்சி மற்றும் மன உறுதியுடன் எந்தவொரு இயலாமையையும் ஒரு அற்புதமான திறனாக மாற்ற முடியும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் மாற்றுத் திறனாளி நபரின் கைகளில் குறை இருந்த போதும் அதனை பொருட்படுத்தாமல் அதே கைகள் கொண்டு வியக்க வைக்கும் வகையில் பந்து வீசவும் செய்கிறார். அனைத்து தடைகளையும் தாண்டி சிறப்பாக செயல்படும் இந்த நபரை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Also Read | "இனி நம்ம வீட்டுல கல் எல்லாம் அடிக்கமாட்டாங்க".. வைடு பால் போட்டதும் அஸ்வின் மனசில் ஓடியது இது தான்.. சுவாரஸ்ய தகவல்!

SPECIALLY ABLED MAN, BOWLING, மாற்றுத்திறனாளி

மற்ற செய்திகள்