VIDEO: '4 வயது குழந்தையின் அட்டகாசமான காரியம்'... 'வியந்துப் போன பிரதமர்'... ‘அப்படி என்ன செஞ்சாங்க!’

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான வந்தே மாதரம் பாடலை, 4 வயது குழந்தை தனது காந்த குரலில் பாடி அசத்தியுள்ளதற்கு, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

VIDEO: '4 வயது குழந்தையின் அட்டகாசமான காரியம்'... 'வியந்துப் போன பிரதமர்'... ‘அப்படி என்ன செஞ்சாங்க!’

தேசப்பக்தியை வெளிப்படுத்தும் வண்ணம் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையில் உருவான ‘வந்தே மாதரம்’ ஆல்பம் இந்தியர்களை மிகவும் கவர்ந்த ஒன்று. சுதந்திர தினம், குடியரசு தினம் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பப்படும். இந்நிலையில் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 4 வயதான எஸ்தர் நாம்தே என்ற சிறுமி தனது இனிய குரலில் 'வந்தே மாதரம்' பாடலை பாடியுள்ளார். இதனை ஒரு ஆல்பம் போன்று எடுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

கேட்போரை சுண்டி இழுக்கும் வண்ணம் காந்த குரலால் பாடியிருப்பதாக பலரும் பாராட்டிய நிலையில், மிசோரம் மாநில முதல்வர் சோரம்தாங்காவின் கவனத்திற்கு சென்றது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘லுங்லேய் பகுதியைச் சேர்ந்த சிறுமி எஸ்தர் நாம்தே, மயக்கும் குரலால் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடியிருக்கிறார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை, பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரீ-ட்வீட் செய்திருக்கிறார். ‘மிகவும் அற்புதமான மற்றும் மதி மயங்கக்கூடிய, எஸ்தர் நாம்தேவின் பாடலை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்த இசைப் பிரியர்களின் கவனத்தையும் 4 வயது சிறுமி எஸ்தர் நாம்தே ஈர்த்துள்ளார் என்றே கூறலாம்.

சிறுமி தனது பெயரில் (Esther Hnamte) யு-ட்யூப் சேனல் ஒன்றை சமீபத்தில் தொடங்கியுள்ளார். அதில் அவர் போடும் வீடியோக்கள் அனைத்தையும் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இந்த சேனலுக்கு 79 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்