'மியூசிக் கேளுங்க சார்.. லைஃப் நல்லாருக்கும்'.. லத்தியை புல்லாங்குழலாக மாத்திய கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > கதைகள்கர்நாடகாவின் ஹீப்ளி பகுதியைச் சேர்ந்த தலைமை காவலர் ஒருவர் தனது லத்தியையே புல்லாங்குழலாக மாற்றி இசையமைத்தது பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
கர்நாடகாவின் ஹீப்ளி பகுதியைச் சேர்ந்த சந்திரகாந்த் ஹட்ஜி என்பவர், அவரது தலைமை அதிகாரியான 52 வயதுடைய பெங்களூர் ஏடிஜிபி பாஸ்கர் ராவின் விருப்பத்தின்பேரில், தனது லத்தியை இசைக்கருவியாக மாற்றி நாட்டுப்புற மெட்டில் மனதை வருடும் அளவுக்கு வாசித்துக் காட்டியுள்ளார்.
இதனால் மனமுவந்து ஏடிஜிபி பாஸ்கர் ராவ், அன்புப்பரிசினை அளித்ததோடு, தனது ட்விட்டர் பக்கத்திலும் சந்திரகாந்த் வாசித்ததை பகிர்ந்துள்ளார். பல வருடங்களாக காற்றுக் கருவிகளைக் கொண்டு இசை வாசித்தல், இசைக்கருவிகளை உருவாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் சந்திரகாந்த் இதன் மூலம் புகழடைந்துள்ளார்.
கல்லுக்குள் ஈரம் என்பது போல் தினந்தோறும் குற்றவியல் வழக்குகளுடன் டீல் பண்ணும் ஒரு காவலருக்குள் இப்படி ஒரு இனிமையான இசை ரசனையும், தவறு செய்தவர்களை பதம் பார்த்து பழுக்க வைக்கும் அந்த லத்திக்குள் இப்படி ஒரு நாதமும் இருப்பதாலேயே என்னவோ இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Chandrakant Hutgi, Head Constable from Hubli Rural Police station has converted his Deadly Fiber Lathi into a Musical Instrument... we are proud of him... pic.twitter.com/gyZWhk1lkb
— Bhaskar Rao IPS (@deepolice12) May 28, 2019