பிளக்கும் வெயில்.. ‘ஸ்பெஷல் சர்வீஸ்’ கொடுக்கும் ‘கவர்மெண்ட் பஸ் கண்டக்டர்’.. நெகிழும் பயணிகள்!
முகப்பு > செய்திகள் > கதைகள்அடிக்கும் வெயிலுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் இருந்தாலும் கூட, தேடித்தேடித்தான் போகவேண்டியுள்ளது.
நல்லெண்ணத்தில் பலர் அக்கறையுடன் தண்ணீர் பந்தல் வைத்தாலும் கூட, சிலர் கொள்கை, பிரச்சாரங்களை, லேபிளைஸ் செய்துதான் தண்ணீர் பந்தல்களையும் நிறுவுகின்றனர். அதனால் தாகம் கடந்து தவித்தாலும் பரவாயில்லை என்று பலர் அவற்றைத் தவிர்த்து விடுவதும் உண்டு.
ஒரு சொட்டு தண்ணீர் தாகத்தைத் தீர்க்கும் என்றாலும், வெகு சிலரே முஸ்தீபுடன் கையில் தண்ணீர் பாட்டலை எடுத்துச் செல்கின்றனர். பலர் அதை எங்கு சுமந்துகொண்டு சென்றுவருவதென்று விட்டுவிடுகின்றனர். ஆனால் தாகம் ஏற்படும் சூழலில் தண்ணீர் தேடும் நிலையில் நாவறண்டு போகிவிடும்.
ஆகையால், மதுரை அரசுப்பேருந்து கண்டக்டரான திருபுவனம் (45) என்பவர் வீட்டில் இருந்து, சுமார் 20க்கும் மேற்பட்ட 1 லிட்டர் மற்றும் 2 லிட்டர் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொண்டுவந்து தமது மதுரை- தஞ்சை செல்லும் பேருந்தில் 4-5 மணி நேர பயண நேரத்தில் பயணிக்கும் பயணிகளின் தாகத்தை இலவசமாகத்தீர்க்கிறார்.
பேருந்தில் பயணிக்கும்போது, புழுக்கத்தினாலும், வெயிலின் கொடுமையினாலும், தண்ணீர் இல்லாமல் முதியவர்கள் பலர் மயங்கியே விடுகின்றனர். பலரது தண்ணீர் பாட்டில் சட்டென தீர்ந்தேவிடும். இந்த சூழலில் சிவகங்கையைச் சேர்ந்த திருபுவனம் என்கிற இந்த கண்டக்டர் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரைக்கும் உதவும் வகையில் இந்த சேவையைச் செய்துவருவதற்காக பலராலும் பாராட்டப்பெற்று வருகிறார்.