டீயை குடிச்சிட்டு 'கப்ப' சாப்ட்ருங்க... கொரோனாவுக்கு மத்தியிலும்... மாஸா 'கல்லா' கட்டும் மதுரைக்காரர்!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

கொரோனா காரணமாக டீக்கடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடைகளுக்கு செல்லவே மக்கள் பெரிதும் யோசிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். இதனால் பெரும்பாலான கடைகள் வருமானமின்றி தள்ளாடி வருகின்றன.

டீயை குடிச்சிட்டு 'கப்ப' சாப்ட்ருங்க... கொரோனாவுக்கு மத்தியிலும்... மாஸா 'கல்லா' கட்டும் மதுரைக்காரர்!

இந்த நிலையில் கொரோனா சூழ்நிலையிலும் மதுரை டீக்கடைக்காரர் ஒருவர் மாஸாக கல்லா கட்டி வருகிறார். அதற்கு காரணம் அவர் மாற்றி யோசித்தது தான். பெரும்பாலும் கடைக்கு சென்றால் பேப்பர் கப்புகளில் தான் டீ கொடுப்பார்கள். நாம் டீயை குடித்து விட்டு கப்பை தூக்கிப்போட்டு விடுவோம்.

இதை மனதில் வைத்து மதுரை கியோஸ்க் டீக்கடை உரிமையாளர் விவேக் சபாபதி சாக்லேட்டால் ஆன டீ கப்பை வடிவமைத்து இருக்கிறார். 10 நிமிடம் வரை சூடு தாங்கும் இந்த சாக்லேட் கப்பை டீ அருந்தி முடித்ததும் அப்படியே சாப்பிட்டு விடலாம்.

சாக்லேட் கப்புடன் ஒரு டீ 20 ரூபாய். கடந்த மாதம் 15-ம் தேதி இதை விவேக் அறிமுகம் செய்ய அன்றே சுமார் 500 கப்புகள் விற்பனை ஆகியுள்ளன. கொரோனாவை மனதில் வைத்து விவேக் உருவாக்கிய இந்த சாக்லேட் கப் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்