'பிரேக் டான்ஸ் ஆடுறேண்ணே!'.. 'எஜமானருடன் ஆட்டம் போடும் வளர்ப்பு நாய்'!.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

ஃபுளோரிடாவை(Florida) சேர்ந்த வளர்ப்பு நாய் ஒன்று, தனது வளர்ப்பாளரை இமிட்டேட் செய்து அவரைப் போலவே டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

'பிரேக் டான்ஸ் ஆடுறேண்ணே!'.. 'எஜமானருடன் ஆட்டம் போடும் வளர்ப்பு நாய்'!.. வைரல் வீடியோ!

வளர்ப்பு நாய்கள் பெரும்பாலும் செல்லமாக வளர்க்கப்பருவதால் அவற்றின் சுட்டித்தனமும், மிடுக்கான சேட்டைகளும் பலரையும் கவர்ந்துவிடக் கூடியதாய் இருக்கும். அப்படித்தான் புளோரிடாவில் வெண்டி பெரிங்குவர்(Wendy Berenguer) எனும் பெண்மணி தான் வளர்க்கும் பைய்லே (Bailey) என்கிற நாய் முன் ஆடுகிறார்.

கிச்சனில் நின்றபடி தனது எஜமானரின் கண்டிப்புத்தனம் இல்லாத, இயல்பான பேச்சைக்கேட்டு அந்த நாயும் ஆடத் தொடங்குகிறது.  மேலும் வெண்டி, தனது நாயிடம் தன்னைப் போல, தன்னுடன் சேர்ந்து ஆடச் சொல்கிறார். அவரது நாயும் செம்ம க்யூட்டாக கஷ்டமான ஸ்டெப்களுடன் கழுத்தையெல்லாம் அசைத்து அசைத்து 

பெர்ஃபார்மென்ஸ் செய்கிறது. அடுத்தடுத்து புதிய ட்விஸ்டுகளுடன் புதிய ஸ்டெப்களையும் தானாகவே முயற்சி செய்து ஆடுகிறது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

DOGS, VIDEOVIRAL, DANCE