"பையன எப்படியாச்சும் ஆர்மி ஆபிஃசர் ஆக்கணும்".. பிரிந்து சென்ற கணவர்.. மகனுக்காக பெண் எடுத்த முடிவு!!.. நெகிழ்ச்சி பின்னணி!!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் நாம் உலாவும் போது நம்மை சுற்றி இந்த உலகில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

"பையன எப்படியாச்சும் ஆர்மி ஆபிஃசர் ஆக்கணும்".. பிரிந்து சென்ற கணவர்.. மகனுக்காக பெண் எடுத்த முடிவு!!.. நெகிழ்ச்சி பின்னணி!!

Also Read | கர்மா ட்வீட் போட்டு வைரலான முகமது ஷமி.. "நாமளே இப்டி பண்ணலாமா?".. கேள்வி கேட்டு அஃப்ரிடி சொன்ன கருத்து!!

அப்படி நாம் கடந்து வரும் செய்திகளில் மனதுக்கு மிக நெருக்கமாகவும், ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் சில செய்திகள் இருக்கும்.

அந்த வகையில் ஒரு நிஜ சம்பவம் தான், தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் ஜோதி வர்மா. 38 வயதாகும் இவர் அதே பகுதியில் இ ரிக்ஷா ஓட்டி வருகிறார்.

பலரது வாழ்வில் சோகங்கள் சூழ்ந்து கொள்வது போல ஜோதி வர்மாவின் வாழ்விலும் ஒரு துயரம் ஏற்பட்டுள்ளது. தனது மகனுக்கு ஒன்றரை வயதாக இருக்கும் போதே ஜோதியின் கணவர் அவரை விட்டு சென்றுள்ளார். இதன் பின்னர், தனது நகைகளை எல்லாம் விற்று இ ரிக்ஷா வாங்கி அதன் மூலம் வருமானம் பெற்று வருகிறார் ஜோதி.

வெறுமென தனது தினசரி வாழ்க்கைக்காக வருமானம் ஈட்டுவது என மட்டுமில்லாமல் தனது ஒரே மகனை ராணுவ அதிகாரியாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தில் தான் இ ரிக்ஷா ஓட்டி வருகிறார் ஜோதி வர்மா. இது தொடர்பாக ANI க்கு ஜோதி வர்மா அளித்த பேட்டியில், "என்னை சுற்றி வலம் வருபவர்கள் என்னை மிகவும் வேடிக்கையாக தான் ஆரம்பத்தில் பார்த்தனர். ஆனாலும் அவர்கள் முன்பு மிகவும் பலம் அடைந்த ஒருத்தியாக நின்றேன். இங்கே ரிக்ஷா ஓட்டுபவர்கள் கூட என்னை துயரப்படுத்தினார்கள். ஆனாலும் எனது மகனை ராணுவ அதிகாரியாக மாற்ற வேண்டும் என்பதால் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறேன்.

bhopal woman driving e rickshaw to make her son army officer

எனது மகனுக்கு ஒன்றரை வயதாக இருக்கும் போது எனது கணவர் என்னை விட்டு சென்றார். அவர் என்னை விட்டு சென்ற பிறகு, சிறிதாக இட்லி, தோசை கடை ஆரம்பித்தேன். ஆனால் அதில் நிறைய பிரச்சனைகள் வந்தது. இதனை தொடர்ந்து சிலரின் வீட்டில் வேலை பார்த்து வந்தேன். ஆனால் எனது மகனை அவர்கள் கிண்டல் செய்ததால் அதனையும் விட்டு விட்டு இ ரிக்ஷா ஓட்ட ஆரம்பித்துள்ளேன்" என ஜோதி தெரிவித்துள்ளார்.

போபால் பகுதியில் இ ரிக்ஷா ஓட்டி வரும் ஜோதி, தனது 11 வயது மகனையும் பள்ளி நேரம் முடிந்த பின் ரிக்ஷாவில் அமர வைத்து கிடைக்கும் நேரத்தில் கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார். ரிக்ஷா ஓட்டி வந்தாலும் கூட மற்ற ஓட்டுனர்கள் முன்னிலையில் பல்வேறு சிக்கல்களையும் சந்தித்து வரும் ஜோதி, அனைத்தையும் தாண்டி தனது மகனை ராணுவ அதிகாரியாக்க வேண்டும் என உறுதியுடன் செயல்பட்டு வருவது தற்போது பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Also Read | கால்பந்து வீராங்கனை மரணம்.. மருத்துவர்களின் கவனக்குறைவு தான் காரணமா?.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!!

BHOPAL, WOMAN, DRIVE, RICKSHAW, ARMY OFFICER

மற்ற செய்திகள்