'இனி ஊசி தேவையில்லை'!.. தோல் வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து!.. புதிய முயற்சி கை கொடுக்குமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புதிதாக அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ள ZyCoV-D கொரோனா தடுப்பு மருந்தை உடலில் செலுத்துவதற்கு ஊசி தேவையில்லை என்ற தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

'இனி ஊசி தேவையில்லை'!.. தோல் வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து!.. புதிய முயற்சி கை கொடுக்குமா?

ஊசி போட்டுக் கொள்வது என்றால் பலருக்கு, குறிப்பாக சிறார்களுக்கு பயம்தான். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் கூட சிலர் தயங்குவதற்கு இது காரணமாக உள்ளது.

இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த சைடஸ் கெடில்லா நிறுவனம், ZyCoV-D கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து, 3 கட்ட பரிசோதனைக்குப் பிறகு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பத்துள்ளது.

3 டோஸ் போட்டுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்து அனுமதிக்கப்பட்டால், அதை 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும் பயன்படுத்த முடியும். இந்த மருந்தை உடலில் செலுத்துவதற்கு ஊசி தேவையில்லை.

ஊசிக்கு பதிலாக, ஸ்பெரிங்-பவர் கருவி மூலம், தோலில் உள்ள நுண்துளைகள் வழியாக தடுப்பு மருந்து செலுத்தப்படும் தொழில்நுட்பத்தை கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்