'மக்களே பெரிய நன்றி'... 'இனிமேல் 'உபர் ஈட்ஸ்'யில் ஆர்டர் பண்ண முடியாது'... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

2017ம் ஆண்டு இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் சேவையை தொடங்கிய உபர் ஈட்ஸ், தனது சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. சொமட்டோ நிறுவனம் உபர் ஈட்ஸ்யை வங்கியுள்ளதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'மக்களே பெரிய நன்றி'... 'இனிமேல் 'உபர் ஈட்ஸ்'யில் ஆர்டர் பண்ண முடியாது'... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியாவில் உணவு டெலிவரி செய்வதில் சொமட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவங்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த உபர் ஈட்ஸ், இந்த இரண்டு நிறுவங்களின் போட்டியினை சமாளிக்க முடியவில்லை. இதனால் வணிக ரீதியில் அதன் செலவை குறைக்க பல வழிகளில் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் அந்த நிறுவனம் இறங்கியது.

இந்நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் உபர் ஈட்ஸ் ஈடுபட்டதால், அந்த நிறுவனத்தால் சரியான சேவையைவழங்க முடியவில்லை. இதனால் நிறுவனத்தை விற்கும் முடிவிற்கு உபர் ஈட்ஸ் வந்தது. இதையடுத்து சொமட்டோ நிறுவனம் உபர் ஈட்ஸ்யை தற்போது வாங்கியுள்ளது.

இந்தியாவில் தற்போது உபர் ஈட்ஸ் நிறுவனத்திற்கு உள்ள 9.99 % பயனாளர்கள் மற்றும் ஊழியர்களின் விவரங்களை உபர் ஈட்ஸ் நிறுவனம் சொமட்டோவிற்கு மாற்ற உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ZOMATO, UBER EATS, ACQUIRED, FOOD DELIVERY