இந்தாங்க 'உங்க' சாப்பாடு.. ஆர்டரைக் கொடுத்துவிட்டு.. 'நாயை' கடத்தி சென்ற ஊழியர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனது நாயை கடத்தி சென்று விட்டதாக சொமாட்டோ நிறுவன ஊழியர் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

இந்தாங்க 'உங்க' சாப்பாடு.. ஆர்டரைக் கொடுத்துவிட்டு.. 'நாயை' கடத்தி சென்ற ஊழியர்!

புனேவை சார்ந்த வந்தனா ஷா என்பவர் கடந்த 7-ம் தேதி மதியம் சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டார். தொடர்ந்து மாலை வெளியில் வந்து பார்த்தபோது அவரது வீட்டு நாயை காணவில்லை. இதனால் அதிர்ந்து போன அவர் அங்கிருந்த சிசிடிவியை ஆராய்ந்து உள்ளார். அதில் விளையாடிக்கொண்டிருந்த நாய் சிசிடிவி கண்காணிப்பு இல்லாத இடத்துக்கு சென்றவுடன் காணாமல் போனது தெரியவந்தது.

 

இதைத்தொடர்ந்து அந்த வழியாக சென்ற மற்றொரு சொமாட்டோ ஊழியரிடம் கேட்டபோது தனது நண்பர் ஒருவரை அந்த நாயுடன் பார்த்ததாக கூறினார்.பின்னர் வந்தனா தனது நாயின் புகைப்படத்தை காண்பித்துக் கேட்டபோது அதை அவர் உறுதி செய்தார். இதன் பின்பு வந்தனா போலீசாரின் உதவியுடன் அந்த டெலிவரிக்கு வந்த நபரின் செல்போனை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் நாயைத் திரும்பத் தர முடியாது. அதை என் கிராமத்திற்கு அனுப்பிவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

 

தற்போது வந்தனா இதுதொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் தனது நாய் திரும்பக் கிடைக்கும்வரை சொமாட்டோ ஆப்பை அன் இன்ஸ்டால் செய்யும் படியும் அவர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்.

ZOMATO