"10 நிமிச Delivery ஐடியா.." 9 மாசத்துல 6800 கோடி.. பிசினஸ் உலகில் கலக்கும் 20 வயது இளைஞர்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாதொழில் ஒன்றை நாம் புதிதாக ஆரம்பிக்கும் போது, நிச்சயம் அதில் வெற்றி பெற நிறைய காலம் எடுத்துக் கொள்ளலாம்.
சில நேரம், அதில் தோல்விகளை சந்தித்து, பின் வாங்க கூட வாய்ப்புகள் உண்டு. ஆனால், புதிய தொழில் தொடங்கி, சுமார் ஒன்றிரண்டு வருடத்திற்குள் மிகப் பெரிய அளவிலான வளர்ச்சியை பெற்றுள்ளனர் இரண்டு இளைஞர்கள்.
19 வயதில், இளைஞர் ஒருவர் உருவாக்கிய நிறுவனம், இன்று இந்தியாவில் மிகப் பெரிய அளவிலான வர்த்தகத்தினை உருவாக்கி, பல முன்னணி நிறுவனங்களுக்கும் கடும் போட்டியாக வளர்ந்து வந்துள்ளது.
இளைஞர்களின் அபார வளர்ச்சி
இணைய வழி வர்த்தகத்தில் இருக்கும் பல நிறுவனங்கள், மக்களுக்கு தேவையான பொருட்களை டெலிவரி செய்து அதிகப்படியான வர்த்தக வளர்ச்சியும் அடைந்து வருகிறது. இவற்றிற்கு போட்டியாக, 19 வயதில் ஆதித் பளிச்சா மற்றும் அவரது நண்பர் கைவல்யா வோஹ்ரா ஆகியோர் உருவாக்கிய Zepto நிறுவனம், ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமே ஆன நிலையில், தற்போது 3 முறை முதலீட்டை திரட்டி உள்ளது.
10 நிமிடத்தில் டெலிவரி..
ஸ்டன்போர்டு கல்லூரியில் படிப்பை பாதிலேயே நிறுத்தி விட்டு, சொந்த தொழில் செய்வதற்காக இந்தியாவுக்கு திரும்பியுள்ளார் ஆதித் பளிச்சா. தன்னுடைய நண்பரான கைவல்யா வோஹ்ராவுடன் இணைந்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு கிரனாகார்ட் என்னும் நிறுவனத்தை உருவாக்கி உள்ளார். இதன் மூலம், மளிகைக் கடைகளுடன் கூட்டணி வைத்து, மக்களுக்கு தேவையான பொருட்களை, 10 நிமிடங்களில் டெலிவரி செய்வது தான் இந்த பிசினஸ் மாடல். இதற்கு Zepto என பெயர் வைத்து, 10 நிமிட இன்ஸ்டன்ட் டெலிவரி கொடுக்கும் சேவையை ஆதித் மற்றும் கைவல்யா அறிமுகம் செய்துள்ளனர்.
9 மாதத்தில் 6800 கோடி
ஆரம்பத்தில், மும்பை போன்ற நெரிசல் அதிகமுள்ள நகரங்களில் Zepto நிறுவனம் தொடங்கிய நிலையில், தற்போது வரை, தங்களின் வர்த்தகத்தை சுமார் 11 நகரங்களில் விரிவாக்கம் செய்துள்ளனர். இதன் மூலம், வெறும் 9 மாதத்தில், அதாவது முதல் முதலீட்டை திரட்டிய பின்பு, சுமார் 900 மில்லியன் டாலர்கள் தொகைக்கு மதிப்பிடப்பட்டுள்ளது Zepto நிறுவனம்.
இந்திய மதிப்பில் சுமார் 6800 கோடி ரூபாய் என்னும் மதிப்புக்கு, Zepto நிறுவனம் உயர்ந்துள்ளது. மளிகை பொருட்களைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக, காஃபி, தின்பண்டங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை வேகமாக டெலிவரி செய்யும் முயற்சியிலும், ஆதித் மற்றும் கைவல்யா இறங்கி உள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றது.
சுமார் 20 வயதைத் தொட்ட இளைஞர்கள், புதிதாக இணைய வர்த்தக நிறுவனம் ஓன்றை தொடங்கி, பல கோடி ரூபாய் மதிப்புக்கு முதலீட்டை மாறியுள்ளது, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்