"இதெல்லாம் எப்போ கிளீன் பண்ணுவீங்க.. என் மக்களுக்கு நான் பதில் சொல்லணும்".. கழிவு நீரில் இறங்கி போராடிய MLA.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர மாநிலத்தில் கழிவு நீர் பாதையை சீரமைக்காததை கண்டித்து சட்ட மன்ற உறுப்பினர் கழிவுநீரில் இறங்கி போராட்டம் நடத்தியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில்  பரவி வருகிறது.

"இதெல்லாம் எப்போ கிளீன் பண்ணுவீங்க.. என் மக்களுக்கு நான் பதில் சொல்லணும்".. கழிவு நீரில் இறங்கி போராடிய MLA.. வைரலாகும் வீடியோ..!

Also Read | "அதுமட்டும் நடந்துட்டா நம்மகிட்ட ஒரு சாட்லைட் கூட மிஞ்சாது"..குண்டை தூக்கிப்போட்ட ஆராய்ச்சியாளர்கள்..!

யுவஜன ஸ்ராமிகா ரிது காங்கிரஸ் கட்சியின் (ஒய்எஸ்ஆர்சிபி) எம்எல்ஏ, கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி. இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட உம்மா ரெட்டி குண்டா பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் சீரமைக்கும் பணிகளை துரிதமாக முடிக்கக்கோரி நகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், உம்மா ரெட்டி குண்டா பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் சீரமைக்காததால் இன்று காலை வித்தியாசமான முறையில் கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி போராட்டத்தில் இறங்கினார்.

போராட்டம்

உம்மா ரெட்டி குண்டா பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதற்காக பணிகள் நடைபெற்றபோது இந்த கழிவு நீர் வாய்க்கால் சேதமடைந்து கழிவு நீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறிவந்தனர். இந்நிலையில், இன்று காலை அந்த பகுதிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி கழிவு நீரில் இறங்கி நகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.

YSRCP MLA Sridhar Reddy stands in drain to protest against municipal o

நான் பதில் சொல்லணும்

மேலும், தான் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருப்பதாக கூறிய அவர்,"இந்த பணிகளை முடிக்க தேவையான காலக்கெடு என்ன என்பதை எனக்கு எழுத்துப் பூர்வமாக அளிக்கவேண்டும். அந்த கால இடைவெளியில் அதிகாரிகள் இதனை செய்யத் தவறினால் மீண்டும் இதே போல போராட்டம் நடத்தப்படும்" எனவும் எச்சரித்திருக்கிறார்.

பலமுறை கோரிக்கை விடுத்தும் பாலம் கட்டாததால், ஒய்.எஸ்.ஆர்.சி.பி எம்.எல்.ஏ ஸ்ரீதர் ரெட்டி நெல்லூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகளை எதிர்த்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

வைரல் வீடியோ

இந்நிலையில், உம்மா ரெட்டி குண்டா பகுதியில் கழிவு நீர் வாய்க்காலில் சட்ட மன்ற உறுப்பினரான கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி இறங்கி போராட்டம் நடத்திய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் உரிய காலத்தில் இவை சரிசெய்யப்படும் என உறுதி அளித்த நிலையில், கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி தனது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்திருக்கிறார்.

 

Also Read | மனைவியின் அக்காவையும் கல்யாணம் செஞ்ச கணவன்.. சந்தேகத்தால் குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்..3 நாளுக்கு அப்பறம் வெளியேவந்த உண்மை..!

YSRCP MLA, YSRCP MLA SRIDHAR REDDY, DRAIN, PROTEST, MUNICIPAL OFFICIALS

மற்ற செய்திகள்