Kaateri Mobile Logo Top

கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை.. ஸ்கேட்டிங் போர்டில் பயணம் செய்த இளைஞர்.. "பக்கத்துல போன சமயத்துல.." பாதியிலேயே முடிந்த பயணம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு - காஷ்மீர் வரை, ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட இளைஞர் ஒருவருக்கு ஹரியானாவில் வைத்து நடைபெற்ற சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை.. ஸ்கேட்டிங் போர்டில் பயணம் செய்த இளைஞர்.. "பக்கத்துல போன சமயத்துல.." பாதியிலேயே முடிந்த பயணம்

Also Read | செஸ் ஒலிம்பியாட்: ஆட்டத்தில் கலக்கும் பார்வை மாற்றுத்திறனாளி வீராங்கனை நடாஷா.!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அனஸ் ஹஜாஸ். இவர் பீகார் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஸ்கேட்டிங் மீது அதிக ஈடுபாடு உடைய அனஸ் ஹஜாஸ், நிறைய பேருக்கு இதனை கற்றுக் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஸ்கேட்டிங் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பயணம் ஒன்றை மேற்கொள்ள அனஸ் முடிவு செய்துள்ளார். அதுவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, தன்னுடைய ஸ்கேட்டிங் போர்ட் மூலம் பயணம் செய்ய வேண்டும் என்றும் அவர் முடிவு செய்துள்ளார்.

youth travel on skating board from kanyakumari to kashmir passed away

அதன்படி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கன்னியாகுமரியில் இருந்து கிளம்பிய அனஸ் ஹஜாஸ், காஷ்மீரில் தனது பயணத்தை முடித்த பிறகு, பூடான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று, விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்திருந்ததாக கூறி இருந்தார்.

youth travel on skating board from kanyakumari to kashmir passed away

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், யாரும் எதிர்பாராத அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து ஆரம்பித்த அனஸ் ஹஜாஸ், ஒன்பது மாநிலங்களைக் கடந்து, ஹரியானா - பஞ்சாப் பாடர் அருகே சென்று கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக டிரக் ஒன்று அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்த போதும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

youth travel on skating board from kanyakumari to kashmir passed away

இன்னும் சில தினங்களில், அவர் காஷ்மீரை அடைந்து, தனது சாதனை பயணத்தை முடித்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில், அவர் விபத்தில் இறந்த சம்பவம், அவரது நெருங்கி வட்டாரத்தில் உள்ள பலரையும் கதறித் துடிக்க வைத்துள்ளது.

அதே போல, அவர் நிச்சயம் காஷ்மீர் அடைந்து சாதனை புரிவார், என காத்திருந்த அவர் ஃபாலோவர்களும் ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனர். சமீபத்தில் கூட தனது பயணம் தொடர்பாக, நிறைய பதிவுகளை இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்த அனஸ் ஹஜாஸ், தற்போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | "வீட சுத்தம் பண்ணிட்டு இருந்தப்போ.." திடீர்ன்னு நடந்த அசம்பாவிதம்.. அண்ணன் செஞ்ச அசாத்திய சம்பவம்

TRAVELS, YOUTH, SKATING BOARD, KANYAKUMARI TO KASHMIR, PASSED AWAY

மற்ற செய்திகள்