'நாங்க விட்ர மாட்டோம்.. பயப்படாத!'.. 'இளைஞர்கள் செய்த அற்புத காரியம்'.. நெகிழவைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த ஆட்டினை இளைஞர்கள் சிலர் கூடி மீட்கும் வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.
ஆழ்குழாய் கிணற்றுக்குள் எப்படியோ தவறி விழுந்துவிட்ட வெள்ளை ஆட்டுக்குட்டி ஒன்றை நண்பர்கள் 4 பேர் சேர்ந்து வெளியில் எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கென அந்த கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், முதலில் ஆடு கத்தும் சத்தம் கேட்கிறதா என்று காதினை வைத்து பார்க்கிறார்.
உடனே நண்பர்களின் உதவியுடன் மிகக் குறைவான ஆழமே உடைய அந்த ஆழ்குழாய்க் கிணற்றுக்குள் உள்ளே தலைகீழாக நுழைகிறார். அவரது கால்களை நண்பர்கள் மேலிருந்து பிடித்துக்கொண்டு, அந்த நபரை தலைகீழாய் பிடிக்கின்றனர். உள்ளே சென்ற அந்த நபர் வெளியில் வரும்போது ஆட்டுக்குட்டியுடன் வெளியே வருகிறார்.
தமிழ்நாட்டில் திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டிப்பட்டியில், 2 வயது குழந்தை சுஜித், தன் வீட்டுக்கு பயன்பாட்டுக்காக தோண்டப்பட்டு விடப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து, 4 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியுள்ள இந்தத் தருணத்தில் இப்படி ஒரு வீடியோவும் வெளியாகியுள்ளது.