காரை வேகமாக ஓட்டி சாலையில் விபத்தை ஏற்படுத்தி, 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் உள்ள கும்ரர் பகுதியில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் வேகமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் உறங்கி கொண்டிருந்த குழந்தைகள் மீது மோதியது. இதில் 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் ஒரு குழந்தை படுகாயம் அடைந்தது.
இதனையடுத்து காரை ஓட்டிவந்த இளைஞரையும், அவருடன் இருந்த நபரையும் அப்பகுதி மக்கள் பிடித்து, கடுமையாக தாக்கி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று கும்பலை கலைத்தனர். அப்போது பொதுமக்களால் தாக்கப்பட்ட கார் ஓட்டுநர் சவுரவ் கங்குலி என்ற 30 வயதான இளைஞர் உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும் உடன் வந்த நபரும் படுகாயம் அடைந்தார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. படுகாயமடைந்த குழந்தையும் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Bihar: 3 children died, 1 injured after an SUV mowed then down while they were sleeping on the footpath in Agam Kuan area of Patna, yesterday. The locals later staged protest on the road. Police say, "3 children died, 1 injured. 1 man in the SUV also died. Investigation underway" pic.twitter.com/6SC5ESz0cu
— ANI (@ANI) June 26, 2019