'பாக்கெட்டில் வெச்சிருந்த செல்போன்'!.. 'திடீரென நடந்த பயங்கர சம்பவம்'.. 'Made in China' வடிவில் வந்த கண்டம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா தவானந்தி கிராமத்தை சேர்ந்த 22 வயது சரத் நேற்று முன்தினம் தனது கிராமத்தில் இருந்து குப்பேகட்டேவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது குப்பேகட்டே கிராமத்தில் உள்ள குளத்தின் அருகே போய்க் கொண்டிருந்தபோது, பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த அவருடைய செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இதனால் நிலைகுலைந்து மோட்டார் சைக்கிளுடன் குளத்தில் பாய்ந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
செல்போன் வெடித்து சிதறியதால், சரத்தின் தொடையில் பலத்த படுகாயம் ஏற்பட்டிருந்தாலும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார். இதனை அடுத்து, அவர் அங்குள்ள சாகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே வெடித்து சிதறிய செல்போன் சீனாவின் தயாரிப்பு என்றும், சரத் அதனை பெங்களூரில் வாங்கியதும், வழக்கத்தை விட அதிக சூடாக இருந்ததால் அந்த செல்போன் வெடித்து சிதறியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆனவட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்