‘அசுரவேகம்’!.. தூக்கிவீசப்பட்ட இளைஞர்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த ‘கோரவிபத்து’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅசுரவேகத்தில் வந்த கார் மோதி இளைஞர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு குறுகிய சாலையில் இளைஞர் ஒருவர் நடந்து சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு அசுர வேகத்தில் வந்த சிவப்பு கலர் கார் ஒன்று இளைஞர் மீது படுவேகத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் சாலையோரமாக உள்ள வீட்டின் சுவற்றில் மோதி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது.
மற்ற செய்திகள்