ராணுவ பயிற்சி முடிந்ததும்.. பயத்தில் இருந்த இளைஞர்.. விபரீத முடிவு நேர்ந்த அடுத்த நாளே பணியில் சேர வந்த 'ஆர்டர்'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரில், இளைஞர் ஒருவர் ராணுவ பயிற்சி முடிந்த நிலையில், அதன் பின்னர் நடந்த அடுத்தடுத்து சம்பவம், பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Also Read | "Tie கட்டுறத நிப்பாட்டுங்க.." வித்தியாசமாக ஐடியா கொடுத்த ஸ்பெயின் பிரதமர்.. எதுக்காக அப்டி பண்ண சொன்னாரு??
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே அஞ்சுகண்டரை என்னும் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ரஞ்சித். 21 வயதாகும் இவரின் தந்தை ரவி, ரஞ்சித்தின் சிறு வயதிலேயே இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனிடையே, ரஞ்சித்தும் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பெங்களூரில் பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரது பயிற்சி நாள் நிறைவு பெற்றதை அடுத்து, ராணுவ சீருடை அணிந்தபடி, புகைப்படம் ஒன்றை எடுத்து சமூக வலைத்தளத்திலும் ரஞ்சித் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. பயிற்சி மையத்தின் வீதிகளை மீறியதால், அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனால், மற்ற அனைவரும் விடுமுறையில் சொந்த ஊர் சென்று விட, ரஞ்சித்திடம் விசாரணை நடைபெற்று வந்ததன் காரணமாக அவரை சொந்த ஊருக்கு அனுப்பவில்லை. இதனால், தனக்கு பணி கிடைக்காமல் ஏதாவது தண்டனை கிடைத்து விடுமோ என்ற பயத்திலும் ரஞ்சித் இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. வேலை கிடைக்குமோ என்ற பயத்தில் இருந்த இளைஞர் ரஞ்சித், தனது அறையில், விபரீத முடிவால் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இந்த சம்பவம், ரஞ்சித்தின் குடும்பத்தினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வேலை கிடைக்காமல் தண்டனை கிடைத்து விடுமோ என்ற பயத்தில் இருந்த இளைஞர், உயிரிழந்து போன நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர், அவரது உடல் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சமீபத்தில் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, அங்கே குடும்பத்தினர் முன்னிலையில் அடக்கமும் செய்யப்பட்டது.
இளைஞர் உயிரிழந்ததை போலவே, மற்றொரு சோகமான சம்பவமும் அந்த இளைஞரின் குடும்பத்தை இன்னும் துயரத்தில் ஆழ்த்தியது. தான் பயிற்சி மைய விதிகளை மீறியதால், வேலை கிடைக்காமல் போய் விடுமோ என அஞ்சிய சமயத்தில் தான், விபரீத முடிவால் உயிரிழந்தார். ஆனால், உயிரிழந்த மறுநாளே, உத்தரகாண்ட் மாநிலத்தில் பணி நியமன உத்தரவும் ரஞ்சித்துக்கு வந்து சேர்ந்துள்ளது.
இன்னும் ஒரு நாள் அவர் உயிரோடு இருந்திருந்தால், அவரது வாழ்க்கையே மாறி ராணுவ வீரராக பணியில் சேர்ந்திருப்பபார் என்பதை நினைத்தும், அவரது குடும்பத்தினர் கலங்கி போயுள்ளனர்.
மற்ற செய்திகள்