'உங்களுக்கு ஒன்னும் பெட்ரோல் Free-ஆ கெடைக்கல'... 'எப்படி வருதுன்னு தெரியுமா?' வறுத்தெடுத்த ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய அமைச்சரும் இந்தியக் குடியுரிமை 'ஏ' பிரிவு  கட்சித் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே சமீபத்தில் பெட்ரோல் விலையேற்றம் பற்றி வெளியிட்ட கருத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா கொடுத்துள்ள பதிலடி ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

'உங்களுக்கு ஒன்னும் பெட்ரோல் Free-ஆ கெடைக்கல'... 'எப்படி வருதுன்னு தெரியுமா?' வறுத்தெடுத்த ட்வீட்!

சமீபத்தில்தான், பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 ரூபாயாக உயர்ந்த விஷயம் மகாராஷ்டிராவில் பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ‘இந்த பெட்ரோல் விலையேற்றம் என்னை பாதிக்கவில்லை, ஏனென்றால் நான் ஒரு மினிஸ்டர். எனக்கு இலவசமாக பெட்ரோல் கிடைக்கிறது. ஆம், அதே சமயத்தில் மக்கள் இந்த விலையேற்றத்தால் அவதிப்படுகின்றனர். இந்த விலையைக் குறைக்க அரசு முயற்சித்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் ஜம்மு & காஷ்மீர் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா,  ‘மினிஸ்டர் சாஹிப், உங்களுக்குக் கிடைக்கும் எரிபொருள் இலவசமானது அல்ல. உழைக்கும் மக்கள் கட்டும் வரிப்பணத்தில் கிடைப்பது அது. உங்களுக்கு கிடைக்கும் “free fuel”க்கு மட்டும் அவர்கள் (வரிப்)பணம் செலுத்தவில்லை. தங்களுக்கான பெட்ரோலுக்கும் தாங்கள்தான் பணம் செலுத்திக் கொள்கின்றனர். ஆனால் நீங்கள் கட்ட வேண்டிய வரிப்பணத்தையே நீங்கள் செலுத்துவதில்லை’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

RAMDAS ATHAWALE, OMARABDULLAH