Kaateri Mobile Logo Top

பானிபூரி கடை நடத்தும் 'இளம்பெண்'.. "பக்கத்துல போய் காரணத்த கேட்டதும்.." ஒட்டுமொத்த நெட்டிசன்களும் ஒடஞ்சு போய்ட்டாங்க..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒருவர் தங்களின் கனவுகளை அடைய வேண்டும் என்றால், அதனை மிக சாதாரணமாக அடைந்து விட முடியாது.

பானிபூரி கடை நடத்தும் 'இளம்பெண்'.. "பக்கத்துல போய் காரணத்த கேட்டதும்.." ஒட்டுமொத்த நெட்டிசன்களும் ஒடஞ்சு போய்ட்டாங்க..

அதற்காக ஏராளமான தியாகங்கள், கடின உழைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் சேர்ந்து நாம் நமது லட்சியத்தை நோக்கி நடை போட்டால் தான், அதனை நம்மால் அடைய முடியும்.

அப்படி அடையும் வழியில் வரும் தடங்கல்களை பிரச்சனைகளாக கருதாமல், அதனை ஏறி மிதித்து கொண்டு சென்றால் மட்டுமே நமக்கான இலக்கை நம்மால் வெல்லலாம்.

அந்த வகையில், இளம் பெண் ஒருவர் கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பிற்காக, ஒருபுறம் கல்லூரிக்கு சென்றும், மறுபுறம் அதற்கான கட்டணம் மற்றும் தன்னுடைய செலவிற்காக, அவர் கையில் எடுத்த விஷயம் ஒன்று, தற்போது பலரையும் இணையத்தில் நெகிழ வைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், மொகாலி பகுதியைச் சேர்ந்தவர் பூனம். கல்லூரியில் படித்து வரும் இவர், தன்னுடைய கல்வி கட்டணங்கள் மற்றும் செலவினை பார்த்துக் கொள்ள, தானே களத்தில் இறங்கி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன் படி, மொகாலி பகுதியில் சொந்தமாக சாட் கடை ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார். அங்கே பானிபூரி உள்ளிட்ட பல விதமான ஸ்நாக்ஸ்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பேசும் பூனம், தன்னுடைய கல்விக்காக தானே இந்த கடையை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக பல் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்த பூனம், அங்கு வேலை பார்த்து வந்ததால், படிப்பதற்காக நேரம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்து வேலையை விட்டுவிட்டு தற்போது சொந்தமாக ஸ்டால் ஒன்றையும் பூனம் போட்டு, ஒரு பக்கம் கிடைக்கும் நேரத்தில் படித்தும் வருகிறார்.

இது தொடர்பான வீடியோவை  Harry Uppal என்ற Food Vlogger ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து, இந்த வீடியோ பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. படிப்பிற்காக தனது பெற்றோர்களை போட்டு தொந்தரவு செய்யாமல், தானே ஒரு ஒரு பக்கம் வேலை பார்த்து அந்த பணத்தின் மூலம் தனது கல்வி தொடர்பான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வரும் இந்த பூனம் என்ற இளம் பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.

WOMAN, STUDENT, INSPIRING

மற்ற செய்திகள்