“காரில் கடத்தப்பட்டு 4 இளைஞர்களால் கூட்டு பலாத்காரம்!”.. “இந்தியாவை உலுக்கிய இளம் பெண்ணின் முடிவு!”
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தின் அகமதாபாத் பகுதியைச் சேர்ந்த 19 வயது பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
தாயுடன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த இந்த பெண்ணை, கடந்த 31-ஆம் தேதி மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டார். இது தொடர்பாக அப்பெண்ணின் பெற்றோர்கள் போலீஸில் புகார் அளித்ததாகவும், ஆனால் அப்புகாரை போலீஸார் ஏற்க மறுத்ததாகவும் பெண்ணின் பெற்றோர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்பெண் மொடாஷா எனும் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. அதன் பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அந்த இளம் பெண்ணை பிமல், தர்ஷன், சதீஷ் மற்றும் ஜிகர் ஆகிய 4 பேர் கொண்ட கும்பல்தான், கடத்தி கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்கள் என்பதை பிரேத பரிசோதனையின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர்.
ஆனால் இளம் பெண் காணாமல் போனபோது, அப்பெண்ணின் பெற்றொர் அளித்த புகாரை போலீஸார் ஏற்காததால், அப்பெண்ணின் உறவினர் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.