"யோகா தோன்றிய போது... இந்தியா என்ற நாடே இல்ல!".. "ஏன் உரிமை கொண்டாடுறீங்க?".. நேபாள் பிரதமர் சர்ச்சை பேச்சு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

யோகா என்ற ஒன்று தோன்றிய போது இந்தியா என்ற நாடே இல்லை என்று நேபாள் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

"யோகா தோன்றிய போது... இந்தியா என்ற நாடே இல்ல!".. "ஏன் உரிமை கொண்டாடுறீங்க?".. நேபாள் பிரதமர் சர்ச்சை பேச்சு!

2015ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் ஜூன் 21ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நேபாள் பிரதமர் சர்மா ஒலி, "ராமர் இந்தியாவில் பிறந்தவரல்ல, நேபாளத்தில் பிறந்தவர் என்றும், உண்மையான அயோத்தி தோரியில் உள்ளது என்றும், போலி அயோத்தியை உருவாக்கி இந்தியா தங்கள் நாட்டு பண்பாட்டு மீது மேலாதிக்கம் செய்யப் பார்க்கிறது என்றும், சர்மா ஒலி காட்டமாகத் தெரிவித்த கருத்துகள் அப்போது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியது.

இந்நிலையில் தற்போது அவர் அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளார். "யோகா இந்தியாவில் தோன்றியதல்ல, அது நேபாளத்தில் தோன்றியது. யோகா என்ற ஒன்று உலகில் தோன்றிய போது இந்தியாவே இல்லை. அப்போது இந்தியா பிரிந்து கிடந்தது" என்று சர்வதேச யோகா தினத்தில் சர்மா ஒலி கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, "இப்போது இந்தியா என்று இருக்கும் நாடு அப்போது இந்தியா என்று அறியப்படவில்லை. பல இனக்குழுக்கள் வாழ்ந்த பகுதிகளாக பிரிந்து கிடந்தது. அப்போது கண்டம், துணைக்கண்டமாக இருந்தது.

ஆகவே, யோகா நேபாளத்தில் தோன்றியது, அதை உருவாக்கிய ஞானிகளுக்கு உரித்தாக்க வேண்டிய பெருமைகளை நாங்கள் வழங்கி அதை வளர்த்தெடுக்கவில்லை. நாம் எப்போதும் நம் பேராசிரியர்களின் பங்களிப்புகளை பேசி வந்திருக்கிறோம்" என்று ஒலி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பிரதமர் இத்தகைய கருத்தை தெரிவித்தது, நெட்டிசன்களிடையே பேசுபொருளாக மாறி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்