“பேசாம போய் உக்காருங்க!”.. “கோரிக்கை வெய்ங்க.. மெரட்டுறல வேலலாம் ஆகாது!”.. மேடையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தின் தாவனகெரே நகரில் நடைபெற்ற பஞ்சாம்ஷாலி சமுதாயத்தினரின் மாநாட்டில், பஞ்சாம்ஷாலி சமூகத்தின் சார்பில் பேசிய மடாதிபதி வச்சானந்தா பேசினார்.
அவர் பேசும்போது மேடையில் வீற்றிருந்த முதல்வர் எடியூரப்பாவை நோக்கி, ‘எங்க சமூகத்து ஆளுங்க உங்களுக்கு துணையாக இருக்காங்க. அதுலயும், எம்.எல்.ஏ. முருகேஷ் நிரானி ஒரு தூண் போல இருக்காரு, அவருக்கு கர்நாடக அமைச்சர்வையில் பதவி வழங்காவிட்டால் எங்க மொத்த சமூகமும் உங்களை புறக்கணிக்கும்’ என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
இதனால் கடுப்பான எடியூரப்பா, தன் இருக்கையில் எழுந்து சென்று வச்சானந்தாவைப் பார்த்து, ‘இதையெல்லாம் பேச வேணாம், இதையெல்லாம் கேக்க நான் இங்க வரல. இப்படி பேசுறத ஏத்துக்க முடியாது’என்று கொந்தளித்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தினர். ஆனாலும் மடாதிபதி வச்சானந்தா, மீண்டும் மிரட்டும் தொனியில் ‘பேசாம போய் இருக்கையில் உட்காருங்கள்’ என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு மேடையில் பேசிய அவர், ‘நான் முதல்வராக வேண்டும் என 17 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். அவர்களுக்கெல்லாம் துரோகம் செய்ய முடியாது. நீங்கள் என்னிடம் கோரிக்கை வைக்கலாம். ஆனால் மிரட்ட முடியாது. இன்னும் இருக்கும் 3 ஆண்டுகால ஆட்சியை வெற்றிகரமாக நான் நடத்த துணை நில்லுங்கள். இல்லாவிடில் ராஜினாமா செய்ய கூட நான் தயார். நான் பதவிக்கு அடிமை அல்ல’ என்று பேசிவிட்டு புறப்படார்.