'வுஹானை' தாக்கிய 'அதே' வகை வைரஸ்... 'இங்கும்' ஆதிக்கம் அதனாலேயே... நிபுணர்கள் கூறும் 'புதிய' தகவல்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வுஹான் நகரை தாக்கிய கொரோனா வைரஸின் எல்-வகையின் ஆதிக்கத்தால் தான் குஜராத்தில் உயிரிழப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

'வுஹானை' தாக்கிய 'அதே' வகை வைரஸ்... 'இங்கும்' ஆதிக்கம் அதனாலேயே... நிபுணர்கள் கூறும் 'புதிய' தகவல்...

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு  அதிகரித்து வரும் நிலையில்,  இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது. அவர்களில் 872 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் 2வது இடத்திலுள்ள குஜராத்தில் இதுவரை 133 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் கொரோனா பாதிப்பின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதற்கு சீனாவின் வுஹான் நகரை தாக்கிய கொரோனா வைரஸின் எல்-வகையின் ஆதிக்கம் இங்கும் இருப்பது காரணமாக இருக்கலாமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசியுள்ள குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ஒருவர், "சமீபத்தில் இங்கு நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் மரபணு பரிசோதனையில்  சீனாவின் வுஹான் நகரில் கண்டறியபட்ட எல்-வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எஸ்-வகையோடு ஒப்பிடும்போது எல்-வகை வைரஸ் மிகவும் கடுமையானது. இதன் காரணமாக குஜராத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும் அதை உறுதிப்படுத்தும் விதமாக இதுவரை ஆராய்ச்சி எதுவும் நடத்தப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மைய இயக்குனர் சிஜி ஜோஷி, "வெளிநாடுகளில் நடத்தப்பட்ட பகுப்பாய்வுகளில், எல்-வகை கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்திய பாதிக்கப்பட்டவர்களிடையே அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. சீனாவின் வுஹானில்தான் இந்த வைரஸ் பரவல்  அதிகமாகக் காணப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.