'விளம்பரம்' பண்ண 'மட்டும் அல்ல...' 'இது வேணாம்னு' சொல்லவும் 'நாங்க வருவோம்...' 'ஓங்கி ஒலிக்கும்' விளையாட்டு' வீரரின் 'முதல் குரல்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சீன பொருட்களை புறக்கணியுங்கள் என்று மல்யுத்த வீரர் சுஷில்குமார் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'விளம்பரம்' பண்ண 'மட்டும் அல்ல...' 'இது வேணாம்னு' சொல்லவும் 'நாங்க வருவோம்...' 'ஓங்கி ஒலிக்கும்' விளையாட்டு' வீரரின் 'முதல் குரல்...'

லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய எதிர்பாராத தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோகித் சர்மா, உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பலரும் தங்கள் இரங்கலை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் "சீனாவுக்கு எதிரான மோதலில் நமது ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ததை கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். நாட்டுக்கான சேவையில் உயிர்நீத்த வீரர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தலைவணங்குகிறேன். கொரோனாவுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் இணைந்து போராடும் வேளையில் சீனா இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது. சீனாவுடன் நாம் நல்ல உறவை வைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சீனாவின் பொருட்களை வாங்காமல் மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  சீன பொருட்கள் நமது நாட்டுக்குள் நுழையாமல் தடுக்க அரசு கொள்கை ரீதியான முடிவு எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்