27 ஆண்டுகளில் இல்லாத 'பேரழிவு'... இந்தியாவுக்குள் 'எண்ட்ரி' கொடுத்த 'வேண்டாத' விருந்தாளிகளால்... விக்கித்துப்போன விவசாயிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் நுழைந்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் பரிதவித்து போய் நிற்கின்றனர்.
![27 ஆண்டுகளில் இல்லாத 'பேரழிவு'... இந்தியாவுக்குள் 'எண்ட்ரி' கொடுத்த 'வேண்டாத' விருந்தாளிகளால்... விக்கித்துப்போன விவசாயிகள்! 27 ஆண்டுகளில் இல்லாத 'பேரழிவு'... இந்தியாவுக்குள் 'எண்ட்ரி' கொடுத்த 'வேண்டாத' விருந்தாளிகளால்... விக்கித்துப்போன விவசாயிகள்!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/worst-attack-in-27-years-locusts-destroy-crops-in-several-s-thum.jpg)
2020-ம் ஆண்டு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளுக்குமே உவப்பானதாக இல்லை. ஒருபுறம் கொரோனாவால் உலக பொருளாதாரம் குப்புற கிடக்க, மறுபுறம் வேலையிழப்பு நடவடிக்கைகளால் பெரும்பான்மை மக்கள் மன அழுத்தத்தில் சிக்கித்தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 27 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு வெட்டுக்கிளிகளால் இந்தியாவுக்கு ஏற்படலாம் என கூறப்படுகிறது. உணவை நாசப்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தான் வழியாக மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப் என வடகிழக்கு மாநிலங்களுக்குள் புகுந்து விட்டன. பயிர்களை அடியோடு அழித்து நாசப்படுத்தும் என்பதால் இவற்றை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
சுமார் 35,000 மக்களுக்குத் தேவையான உணவை இவை ஒரே நாளில் உண்ணும் என்பதால் இந்தியாவில் உணவு உற்பத்திக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரும் தாக்குதல் தற்போது நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.
இவற்றின் இடம்பெயர்வை கணிக்க முடியாது என்றாலும் படையெடுப்புக்கு முன்னரே பூச்சிக்கொல்லி தெளித்தால் இவற்றை ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஆனால் வெட்டுக்கிளிகளை அனுமதித்து விட்டு பின்னர் நடவடிக்கை எடுப்பதால் எந்தவித பயனும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
![‘ஆளே இல்ல ஆனா...' 'ட்ரெஸ்' மட்டும் 'நடந்து வருது...' 'இது' என்ன 'புது' விதமான 'பேஷன் ஷோ...' ‘ஆளே இல்ல ஆனா...' 'ட்ரெஸ்' மட்டும் 'நடந்து வருது...' 'இது' என்ன 'புது' விதமான 'பேஷன் ஷோ...'](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/virtual-reality-fashion-show-hosted-by-famous-fashion-designer-thum.jpg)
!['ராஜஸ்தானை' துவம்சம் செய்யும் 'வெட்டுக்கிளிகள்...' 'லட்சக்கணக்கில்' போர்வை போல் 'படந்திருக்கும் காட்சி...' 'சில்லிட வைக்கும் வீடியோ...' 'ராஜஸ்தானை' துவம்சம் செய்யும் 'வெட்டுக்கிளிகள்...' 'லட்சக்கணக்கில்' போர்வை போல் 'படந்திருக்கும் காட்சி...' 'சில்லிட வைக்கும் வீடியோ...'](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/millions-of-locusts-invasion-in-rajasthan-distress-farmers-thum.jpg)
![தொட்டிலில் 'தூங்கிக்கொண்டு' இருந்த '1 வயது' குழந்தையை... 100 மீட்டருக்கு தூக்கிச்சென்று 'சோளக்காட்டில்' வீசிய சூறைக்காற்று! தொட்டிலில் 'தூங்கிக்கொண்டு' இருந்த '1 வயது' குழந்தையை... 100 மீட்டருக்கு தூக்கிச்சென்று 'சோளக்காட்டில்' வீசிய சூறைக்காற்று!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/heavy-storm-throw-baby-out-of-the-house-near-salem-thum.jpg)
!['கொரோனா புரட்டி எடுக்கும் போதா இது நடக்கணும்?'.. வேலையை திடீரென்று ராஜினாமா செய்த 200 நர்சுகள்!.. மஹாராஷ்டிராவில் பரபரப்பு!.. என்ன காரணம்? 'கொரோனா புரட்டி எடுக்கும் போதா இது நடக்கணும்?'.. வேலையை திடீரென்று ராஜினாமா செய்த 200 நர்சுகள்!.. மஹாராஷ்டிராவில் பரபரப்பு!.. என்ன காரணம்?](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/maharashtra-nurses-from-kerala-resign-their-jobs-amid-outbreak-thum.jpg)
![‘நிற்க இடமின்றி நடக்கும் வியாபாரம்’.. மீண்டும் விற்பனையை தொடங்கிய சென்னையின் ‘பிரபல’ வணிக ஏரியா..! ‘நிற்க இடமின்றி நடக்கும் வியாபாரம்’.. மீண்டும் விற்பனையை தொடங்கிய சென்னையின் ‘பிரபல’ வணிக ஏரியா..!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/chennai-electronics-market-hub-ritchie-street-has-resumed-business-thum.jpg)