'வீட்டிலிருந்தே வேலை...' 'பட்டையை கிளப்பும் ஆஃபர்...' 'ஊரடங்கிற்கு பிறகும்...' 'அரசு ஊழியர்களுக்கு' அடிக்கும் 'ஜாக்பாட்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாமுழு கதவைடப்புக்கு பின்னர் வீட்டில் இருந்தபடி ஊழியர்களை வேலை வாங்குவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

கொரோனா ஊரடங்கால் பலரும் வீட்டுக்குள் முடங்கியதால், வொர்க் பிரம் ஹோம் முக்கியத்துவம் பெற்றது. வீட்டை விட்டு வெளியே வராமல் அலுவலக பணிகள் நடப்பதில் இந்த முறை வெற்றி பெற்றது. இந்தியாவில் இதுவரை இந்த முறை பிரபலம் ஆகாமல் இருந்தது. கொரோனாவுக்கு பின் இந்த முறை சாத்தியம் ஆனது.
தனியார் நிறுவனங்கள் முழு அளவில் ஈடுபட்டாலும், அரசு சார்பில் வீட்டில் இருந்தபடி பணியை முழு அளவில் ஈடுபடவில்லை. இருப்பினும், உயர் அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசித்தல், பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தல் என தங்கள் பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதில் பெரும் வெற்றி கிட்டியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி வரும் காலத்திலும் அதாவது ஊரடங்கிற்கு பின்னர் மத்திய அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு ஒரு முறை குறைந்தது 15 நாட்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அனுமதிக்கலாம் என பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் விரும்புகிறது. இது தொடர்பாக வரும் 21 ம் தேதிக்குள் கருத்துக்களை அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசின் முடிவுக்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர். முதலில் 15 நாட்கள் வழங்கிய பின்னர், பணியாற்றும் நாட்களை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.