உயிரைவிட அந்த Bag முக்கியமா?.. ரயில் வர்றப்போ குறுக்கே பாய்ந்த பெண்.. திக்..திக்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தினை கடந்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரயில்வே தண்டவாளங்களை கடக்கும் போது பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இருப்பினும் சிலர் கவனக்குறைவாக தண்டவாளங்களை கடக்க முற்பட்டு, விபத்தில் சிக்குவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில், தண்டவாளத்தின் மறுபுறத்தில் இருந்த தனது Bag-ஐ எடுக்க ரயில் வரும்போது தண்டவாளத்தை கடந்திருக்கிறார் பெண் ஒருவர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரியான அவனீஷ் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அவனீஷ் சரண்
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனீஷ் சரண். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் ஈடுபட்டு வரும் அவனீஷ், தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் சமூக மேம்பாடு, தன்னம்பிக்கை அளிக்கும் தகவல்களையும் அவ்வப்போது பதிவிடுவது வழக்கம். இதன் காரணமாகவே இவரை ட்விட்டர் பக்கத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ள வீடியோ பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
வைரல் வீடியோ
இந்த வீடியோவில் தண்டவாளத்தில் நிற்கும் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அருகே இருக்கும் மற்றொரு தண்டவாளத்தினை கடக்கிறார்கள். அப்போது, தனது குடும்பத்தினருடன் தண்டவாளத்தை கடந்த பெண் ஒருவர், விட்டுச் சென்ற தனது பையை எடுக்க மீண்டும் தண்டவாளத்தை கடக்கிறார். அதற்குள் ரயில் அருகே வந்துவிட்டது. இருப்பினும் அந்த பெண் அவசரஅவசரமாக தாவி குதிக்கவே மயிரிழையில் உயிர் தப்பினார். மேலும், ரயில் கடக்கும்வரை கீழே அமர்ந்திருந்த அவர் அதன்பின்னர் மீண்டும் அந்தப்பக்கம் செல்கிறார்.
இந்த வீடியாவை அவனீஷ் சரண் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,"வாழ்க்கை உங்களுடையது. அப்போது முடிவும் உங்களுடையது தான்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரையில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
ज़िंदगी आपकी है. फ़ैसला आपका है. pic.twitter.com/eMrl65FiCj
— Awanish Sharan (@AwanishSharan) July 19, 2022
மற்ற செய்திகள்