படிச்சது MA .. பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை.. எல்லாத்தையும் உதறித் தள்ளிவிட்டு ரோட்டுக்கடை தொடங்கிய பெண்.. நெகிழ வைக்கும் காரணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅவ்வப்போது இணையத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் நிறைய செய்திகள் பெரிய அளவில் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.
இதில் சில தனிப்பட்ட நபர்கள் தங்களின் வாழ்வில் முன்னேற்றம் காண்பது குறித்தும், விதவிதமாக விஷயங்களை செய்து பெரிய அளவில் யோசிப்பதை குறித்தும் நிறைய இன்ஸ்பயரிங் ஸ்டோரிகளையும் நாம் கடந்து வந்திருப்போம்.
அந்த வகையில் தான் டெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் குறித்த நிஜ கதையும் தற்போது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் ஷர்மிஸ்தா கோஷ். இவர் எம்ஏ ஆங்கிலம் படித்துவிட்டு பிரிட்டிஷ் கவுன்சிலில் லைப்ரரியனாக பணிபுரிந்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. அப்படி இருக்கையில் சிறந்த ஒரு வேலையை விட்டுவிட்டு தற்போது டீக்கடை ஒன்றை சொந்தமாக தொடங்கியுள்ளார் ஷர்மிஸ்தா.
டீக்கடையை தொடங்கியுள்ள ஷர்மிஸ்தா, இதுகுறித்து தெரிவிக்கும் காரணம் தான் தற்போது பலரையும் வியப்படைய வைத்துள்ளது. முன்னதாக நபர் ஒருவர் அங்கே டீ குடிக்க சென்ற போது சிறிய டீக்கடையில் நடத்தும் பெண் ஒருவர், சரளமாக ஆங்கிலம் பேசுவதை அறிந்து அவரிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போதுதான் ஷர்மிஸ்தா கோஷ் பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியனாக பணிபுரிந்து வந்ததும் அந்த வேலையை விட்டு விட்டு தற்போது டீக்கடை நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.
வேலையை உதறிவிட்டு டீக்கடை நடத்தி வருவதற்கான காரணம் பற்றி பேசும் ஷர்மிஸ்தா கோஷ், தனது சிறிய கடை மூலம் இந்தியாவின் பல இடங்களில் தனது டீக்கடையின் கிளைகளை ஆரம்பித்து பெரிய தொழிலதிபராக மாற வேண்டும் என்ற கனவை அடைவதற்காக தான் என்றும் கூறியுள்ளார்.
சிறந்த வேலை ஒன்று இருந்த போதும் தனது கனவை அடைய வேண்டும் என்பதற்காக சொந்தமாக டீக்கடையை தொடங்கி பெரிய தொழிலபதிராக ஆசைப்பட்டு செயல்படும் பெண் குறித்த செய்தி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் நிச்சயம் அந்த பெண் தான் நினைத்தது போலவே இந்தியாவின் பல இடங்களில் தனது டீக்கடையின் கிளைகளைத் திறந்து பெரிய ஆளாக வருவார் என குறிப்பிட்டு தங்களின் வாழ்த்துக்களையும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read | 30 வருஷம் யாராலுமே தொட முடியாத மாஃபியா மன்னன்.. கடைசில சுலபமா சிக்கிய சம்பவம்.. இதை யாருமே எதிர்பார்க்கல..!
மற்ற செய்திகள்