லாக்டவுனால் ‘கல்யாணம்’ தள்ளிபோய்கிட்டே இருக்கு.. இதுக்குமேல ‘வெய்ட்’ பண்ண முடியாது.. இளம்பெண் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநிச்சயதார்த்தம் முடிந்த இளைஞரை கரம்பிடிக்க 80 கிலோமீட்டர் நடந்தே வந்த பெண்ணின் செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் கோல்தி (20). இவருக்கும் அதே மாநிலத்தை சேர்ந்த வீரேந்திரகுமார் என்பருக்கும் கடந்த 4ம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால் இவர்களது திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையே இருவரும் தினமும் செல்போன் மூலம் பேசி வந்துள்ளனர். ஊடங்கு முடிந்துவிடும் என நினைத்த கோல்திக்கு, மீண்டும் ஊரடங்கு நீட்டக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் தனது திருமணம் மறுபடியும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டதை உணர்ந்த கோல்தி ஒரு அதிரடி முடிவை எடுத்தார். அதன்படி மணமகனின் வீட்டுக்கு நடந்தே சென்றுவிடலாம் என முடிவெடித்து நடக்க ஆரம்பித்தார்.
சுமார் 80 கிலோமீட்டர் தூரம் நடந்தே மணமகனின் வீட்டை கோல்தி அடைந்தார். திடீரென மணப்பெண் கோல்தி வீட்டுமுன் நின்றதைக் கண்டு வீரேந்திரக்குமார் அதிர்ச்சியடந்தார். இதனை அடுத்து அருகில் உள்ள கோவிலில் இருவருக்கும் எளிமையாக திருமணம் நடந்தது. மணமகனை கரம்பிடிக்க 80 கிலோமீட்டர் தனியாக நடந்த வந்த மணப்பெண் துணிச்சல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
மற்ற செய்திகள்