'திருமணம் ஆன ஒரே ஆண்டில்'... 'காதல் கணவர் செய்த காரியம்'... 'ஐடி ஊழியருக்கு நேர்ந்த துயரத்தால் கதறித் துடிக்கும் பெற்றோர்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூருவில் உயிரிழந்த பெண் ஐடி ஊழியரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

'திருமணம் ஆன ஒரே ஆண்டில்'... 'காதல் கணவர் செய்த காரியம்'... 'ஐடி ஊழியருக்கு நேர்ந்த துயரத்தால் கதறித் துடிக்கும் பெற்றோர்'...

தெலுங்கானா மாநிலம் கம்மாரெட்டியை சேர்ந்த சரண்யா (25) என்பவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்த நிலையில், பள்ளி தோழரான ரோகித் என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவர் ரோகித்துடன் அவர் மடிவாளா அருகே வெங்கடபுரா பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த சில மாதங்களாக ரோகித் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சரண்யாவிடம் தகராறு செய்து, அவரை அடித்து, உதைத்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி சரண்யா தனது பெற்றோரிடம் கூறி அழ, அவர்கள் சரண்யாவை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரண்யா தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சரண்யாவின் பெற்றோருக்கும், மடிவாளா போலீசாருக்கும் ரோகித் தகவல் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே சரண்யாவின் மரணம் குறித்து அறிந்து துடித்துப்போன பெற்றோர், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், ரோகித் தான் அவரை கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டு இருப்பதாக சந்தேகம் உள்ளதாக மடிவாளா போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில்  வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ரோகித்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்