"புருஷன் சவூதி போய்ட்டாரு.. இப்போதைக்கு வரமாட்டாரு"... மனைவி போட்ட பக்கா பிளான்.. 5 வருஷம் கழிச்சு ஆசையா ஊருக்கு வந்த கணவருக்கு காத்திருந்த ஷாக்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்கத்தில் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த கணவர் மரணமடைந்துவிட்டதாக கூறி அவரது மனைவி 26 லட்ச ரூபாயை சுருட்டிய சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேற்குவங்க மாநிலம் மூர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்தவர் நுர்ஜமால் ஷேக். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ஷாஹினா கதும் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு, பணிநிமித்தமாக சவூதி அரேபியா செல்ல முடிவெடுத்துள்ளார் ஷேக். இதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்த அவர், 5 வருடங்களுக்கு முன்னர் சவூதி சென்றிருக்கின்றார்.
பேச மறுத்த மனைவி
சவூதிக்கு சென்ற தனது கணவரிடம் போன் மூலமாக ஆரம்பித்தில் பேசிவந்த கதும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவருடன் பேசுவதை குறைத்திருக்கிறார். அதன்பிறகு தனது கணவருடன் பேசுவதை கதும் முழுவதுமாக நிறுத்தியுள்ளார். இதனிடையே, வங்கியில் ஷேக் 25 லட்ச ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு எடுத்திருப்பதை அறிந்த அவரது மனைவி மாஸ்டர் பிளான் போட்டுள்ளார்.
இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் சொந்த ஊர் திரும்பிய ஷேக்கிற்கு பல உண்மைகள் தெரியவந்திருக்கின்றன. தனது பெயரில் வங்கியில் போடப்பட்டிருந்த ஆயுள் காப்பீடை மனைவி பெற்றதை அறிந்த அவர் வங்கி மேலாளரை சந்தித்து விளக்கம் கேட்டிருக்கிறார்.
போலி சான்றிதழ்
கதும் தனது கணவர் ஷேக் இறந்துவிட்டதாக கூறி வங்கியில் இருந்து 25 லட்ச ரூபாயை பெற்றிருக்கிறார். இதனை உறுதிப்படுத்திய வங்கி மேலாளர் அவர் (கதும்), இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அனைத்து தொகையையும் பெற்றுக்கொண்டதாகவும், அதேபோல, சொத்துக்களை தனது பெயரில் மாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷேக் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்திருக்கிறார்.
புகார்
இதனை தொடர்ந்து பரனா காவல் நிலையத்தில் தனது மனைவி மீது புகார் அளித்துள்ளார் ஷேக். அவர் அளித்த புகாரில்," திருமணத்தை மீறிய உறவில் இருந்த எனது மனைவி போலியான இறப்பு சான்றிதழை கொடுத்து 25 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களிடம் இருந்து எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கணவன் இறந்துவிட்டதாக போலியான சான்றிதழ் சமர்ப்பித்து 25 லட்ச ரூபாயுடன் தலைமறைவான பெண்ணை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
மற்ற செய்திகள்