புருஷனுக்காக 3 வருஷமா ஸ்கெட்ச் போட்டு காத்திருந்த மனைவி.. போலீசில் சிக்கியதும் சொல்லிய விஷயம்.. கதிகலங்கிப்போன உறவினர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தானில் இன்சூரன்ஸ் பணத்திற்காக ஆசைப்பட்டு கணவரை கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வாக்குவாதம்
ராஜஸ்தான் மாநிலம், நாகெளர் மாவட்டத்திலுள்ள குந்தியா கிராமத்தை சேர்ந்தவர் நேமாராம் மகத். இவருடைய வயது 67. இவருக்கு சாரதா எனும் மனைவி இருக்கிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த தம்பதியிடையே அடிக்கடி சொத்து குறித்த தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், சாரதா தன்னுடைய கணவன் பெயரிலிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தன்னுடைய பெயரில் மாற்றச்சொல்லி அடிக்கடி அவரை துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இதுகுறித்து இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது. அதில் கணவரின் காலை சாரதா உடைத்ததாக சொல்லப்படுகிறது.
இன்சூரன்ஸ்
இதனிடையே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சாரதா தனது கணவரின் பெயரில் 30 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் செய்திருக்கிறார். அதன்பிறகு தங்களது மகனுக்கு 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள டிராக்டர் ஒன்றை இந்த தம்பதியினர் வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். சாரதா மூன்று வருடங்களுக்கு முன்பு, நேமாராம் பெயரிலிருந்த 15 பிகாஸ் (bighas) நிலத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றிருக்கிறார். அதிலிருந்தே இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுவந்ததாக தெரிகிறது. மேலும், கடந்த 3 ஆண்டுகளாகவே கணவர் மீது சரிதா கொலை முயற்சி செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
கைது
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் நேமாராம் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்திருக்கிறார். அப்போது சாரதாவுக்கும் நேமாராமுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் இது கைகலப்பாக மாறியிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த சாரதா தனது கணவரை கொலை செய்திருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகெளர் மாவட்டத்தின் மெர்டா காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீட்டில் இருந்த சாரதாவை கைது செய்த போலீசார், நேமாராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், சரிதாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து நேமாராமின் குடும்பத்தினர் இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டே சரிதா இந்த காரியத்தை செய்திருப்பதாகவும், ஏற்கனவே சொத்து தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்