'அதிகரிக்கும் கொரோனா'... 'பெண்கள் தடுப்பூசி போட்டால் மாதவிடாய் காலத்தில் இந்த பிரச்சனை இருக்குமா'?... வல்லுநர்கள் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு வழக்கத்தை விட மாதவிடாய் உதிரப்போக்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அதுகுறித்து வல்லுநர்கள் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்கள்.

'அதிகரிக்கும் கொரோனா'... 'பெண்கள் தடுப்பூசி போட்டால் மாதவிடாய் காலத்தில் இந்த பிரச்சனை இருக்குமா'?... வல்லுநர்கள் விளக்கம்!

கடந்த வரும் ஆரம்பித்த கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், தற்போது இரண்டாவது அலை படுதீவிரமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி மிகவும் அவசியமாகிவிட்டது. இதனால் இந்த கொரோனா தடுப்பூசியை மக்கள் இரண்டு டோஸ்களாக போட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு வழக்கத்தை விட மாதவிடாய் உதிரப்போக்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Woman reporting irregular menstruation after the COVID-19 shot, Expert

இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பான VAERS ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 32 பேர் மாதவிலக்கு காலங்களில் மாற்றம் இருப்பதாகக் கூறியுள்ளனர். கொரோனா தடுப்பூசி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தினாலும் மாதவிடாய் சுழற்சி காலம் சிறிய மாற்றங்களை உண்டாக்குகிறது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.

மருத்துவ அறிவியல் துறையில் உள்ள வல்லுநர்களின் கூற்றுப்படி மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றம் தடுப்பூசியில் உள்ள நானோ துகள்கள் காரணமாக இருக்கலாம். இது மாதவிடாய் சுழற்சி காலத்தை மாற்றக்கூடும். இந்த நானோ துகள்கள் பெண்களில் தற்காலிக நோய் எதிர்ப்பு எதிர்வினை உருவாக்கலாம். அதே நேரத்தில் மாதவிடாய் காலத்தில் அதிகமான உதிரப்போக்கு தசைப்பிடிப்புகள் சாதாரண பக்கவிளைவுகள் மட்டுமே.

Woman reporting irregular menstruation after the COVID-19 shot, Expert

இது குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை. இது காய்ச்சல் , தலைவலி போன்ற அறிகுறிகள் போன்று சாதாரணமானது. கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு நீங்கள் இதை உணரலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதேநேரத்தில் கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு மிக அதிகமான மாதவிடாய் உதிரப்போக்கைக் கொண்டிருந்தால் குறிப்பாக ஐந்து நாட்களுக்கு மேலாக உதிரப்போக்கு நீடித்தால் மருத்துவரை அணுகுங்கள். அதே போன்று வலி வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது எனவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்