ஆசையாய் வளர்த்த நாயின் மரண சோகம் தாங்காத இளம்பெண்.. திடீரென எடுத்த அதிர்ச்சி முடிவு

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் அது குறித்த தகவல்கள் வெளியாகி அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆசையாய் வளர்த்த நாயின் மரண சோகம் தாங்காத இளம்பெண்.. திடீரென எடுத்த அதிர்ச்சி முடிவு

Also Read | "சிறிய வாய்ப்பும் மாற்றத்தை நிகழ்த்தும்".. நரிக்குறவர் சமுதாய பெண்களின் மகத்தான முயற்சி.. அமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி..!

பொதுவாக மனிதர்களுக்கு வளர்ப்பு பிராணிகளின் மேல் அளவு கடந்த பிரியம் இருக்கும். குறிப்பாக நாய்களை தங்கள் வீட்டில் வளர்க்க வளரும் விருப்பப்படுவது உண்டு. அதனை தங்களது குடும்பத்தில் ஒருவராகவே பாவித்து வளர்த்தும் வருவார்கள். அப்படியானவர்களில் ஒருவர் தான் சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியைச் சேர்ந்த ரிச்சா சோந்தியா. 20 வயதான இவர் சமீபத்தில் நாய்க்குட்டி ஒன்றை வாங்கி தனது வீட்டில் வளர்த்து வந்திருக்கிறார்.

அதனுடன் மிகவும் பாசமாக பழகி வந்த ரிச்சா அது குறித்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்திலும் மகிழ்ச்சியோடு பேசி இருந்திருக்கிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ரிச்சா வளர்ந்துவந்த நாயின் உடல்நிலை பாதிப்படைந்துள்ளது. இதனை அடுத்து தனது நாய்க்கு ரிச்சா சிகிச்சையும் அளித்து கவனித்து வந்திருக்கிறார். ஆனால் அவருடைய நாய் மரணமடைந்திருக்கிறது.

Woman Reportedly took sad decision after pet dog dies

Images are subject to © copyright to their respective owners.

இதனால் பெரும் சோகமடைந்த ரிச்சா தனது நண்பர்களிடத்தில் இது பற்றி வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் நேற்று வீட்டிலிருந்த ரிச்சா வெகு நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வராததால் அவரது தாய் சந்தேகம் அடைந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது ரிச்சா தனது உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Woman Reportedly took sad decision after pet dog dies

Images are subject to © copyright to their respective owners.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரிச்சாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கின்றனர். இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர். தனது செல்ல நாய் மரணமடைந்ததால் இளம் பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

Also Read | மகளுடைய டான்ஸ்.. கீழே இருந்தே மூவ்மெண்ட் கொடுத்த அப்பா.. மொத்த கூட்டமும் இவங்களைத்தான் பார்த்திருக்கு.. கியூட் வீடியோ..!

WOMAN, PET DOG

மற்ற செய்திகள்