9 வருசத்துக்கு முன்னாடி அப்பா மரணம்.. 52 வயதில் மறுமணம் செய்த அம்மா.. மகன் போட்ட உருக்கமான பதிவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கணவனை இழந்த பெண் தனது குடும்ப நண்பரை மகன் ஆதரவுடன் கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 வருசத்துக்கு முன்னாடி அப்பா மரணம்.. 52 வயதில் மறுமணம் செய்த அம்மா.. மகன் போட்ட உருக்கமான பதிவு..!

கணவன் இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்வது என்பது தற்போது வரையிலும் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கப்பட்டு வருகிறது. குழந்தை இல்லாத இளம்பெண் கணவனை இழந்து மறுமணம் செய்து கொண்டால், அங்கீகரிக்கும் சமூகம், குழந்தையுடன் இருப்பவர்களின் மறுமணம் மீது விமர்சனங்களை வைத்து வருகிறது.

இந்த நிலையில், இளைஞர் ஒருவர் தனது தாய் 52 வயதில் மறுமணம் செய்து கொண்டதை இணையத்தில் பகிர்ந்துள்ளார். 2013-ம் ஆண்டு தனது 44 வயதில் அப்பெண் கணவனை இழந்துள்ளார். இதன் பின்னர் கேன்சர், கொரோனா தொற்று என பலவற்றை கடந்து, தனது 52 வது வயதில் குடும்ப நண்பர் ஒருவரை மறுமணம் செய்திருக்கிறார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, துபாயில் வசிக்கும் ஜிமீத் காந்தி என்பவர் தனது தாய் வயது, மரபு போன்ற பழங்கால காரணங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, 52 வயதில் தனக்கான காதலை தேடி பிடித்து திருமணம் செய்து கொண்டுள்ளதை லிங்டு இன் தளத்தில் பகிர்ந்திருந்தார்

அதில், ‘என் தாய் காமினி காந்தி, 2013-ம் ஆண்டு 44 வயதில் கணவனை இழந்தார். அதன் பின்னர் 2019-ம் ஆண்டு அவருக்கு 3-ம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பலமுறை கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், 2 வருட போராட்டத்திற்கு பிறகு கேன்சரில் இருந்து மீண்டார்’ என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பலரும் ஜிமீத் காந்தியின் தாய் மறுமணம் செய்துகொண்டதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

MARRIED, MOTHER, SON

மற்ற செய்திகள்